Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிட் நைட்.. கோவையில் ரேபிடோ ஆட்டோவில் ஏறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் ரேபிடோ ஆட்டோவில் நள்ளிரவில் பயணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கோட்டையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கடந்த சில மாதங்களாக கோவையில் வசித்து வந்தார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கோவையில் தனியாக இருக்கும் அவர் செல்வபுரத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கி வருகிறார். தனது நிமித்தமாக அண்டை மாவட்டங்களுக்கு இவர் செல்வது வழக்கம்.

இரவு நேரம்

இரவு நேரம்

பொதுவாக அண்டை மாவட்டங்களுக்கு சென்றால் பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் இவர் லேட்டாக ஊர் திரும்புவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு லேட்டாக கோவைக்கு வந்துள்ளார். நள்ளிரவு வேளையில் ஹோப் கல்லூரியில் இறங்கியவர் அங்கிருந்து ரேபிடோ ஆட்டோ புக் செய்து செல்வபுரம் செல்ல முடிவு செய்துள்ளார். இவருக்கு புக்கிங் செய்து சில நிமிடங்கள் கழித்து ஆட்டோ கிடைத்துள்ளது. இவரும் ஆட்டோவில் கிளம்பி சென்றுள்ளார்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் அவினாசி ரோட்டில் செல்லும் போது அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்று உள்ளார். அந்த சாலையில் அப்போது இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. இதை பயன்படுத்திக்கொண்டு ஆட்டோவை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார். அந்த பெண் ஆட்டோ டிரைவருடன் சண்டை போட்டு பதிலுக்கு தாக்கி உள்ளார்.

சத்தம்

சத்தம்


இதனால் கோபம் அடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் பெண்ணை தாக்கிவிட்டு, அவர் சுதாரிக்கும் முன் ஆட்டோவை வேகமாக எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார். ஆட்டோ டிரைவரிடம் ஆட்டோவை நிறுத்துமாறு அந்த பெண் தொடர்ந்து சத்தம் போட்டுள்ளார். ஆனால் டிரைவரோ வேறு ஒரு இடத்தில் வைத்து பெண்ணை வன்புணர்வு செய்ய திட்டமிட்டு அவரை கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து கத்திகொண்டே வந்த பெண் வந்த போதிலும் சாலையில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை.

தப்பித்தார்

தப்பித்தார்

இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உள்ள வணிக வளாகம் அருகே அந்த ஆட்டோ சென்ற போது வளைவில் கொஞ்சம் மெதுவாக திரும்பியது. அப்போது நேரம் பார்த்து அந்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். அங்கே கொஞ்சம் மக்கள் கூட்டம் இருந்ததால் ஆட்டோ டிரைவர் அங்கிருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பித்து சென்றார். கீழே விழுந்ததில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே தனது நண்பர்களுக்கு அந்த பெண் கால் செய்தார்.

 போன்

போன்

இதையடுத்து நண்பர்கள் வந்து அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து பீளமேடு போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த பெண்ணை வன்புணர்வு செய்ய முயன்றது கோவை உக்கடம் அருள் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது சாதிக் (வயது 43) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+