Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மேட்டுப்பாளையத்தில் கணவர், மனைவி, மகள் தற்கொலை! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி, 10 வயது மகள் ஆகிய மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தம்பு நகரைச் சேர்ந்த கமலேஷ் (48), அவரது மனைவி இலக்கியா (45) மற்றும் மகள் எக்சிதா ஏஞ்சேல் (10) ஆகியோராவர்.

coimbatore

மின்வாரிய உதவிப் பொறியாளரான கமலேஷின் மனைவி இலக்கியா, நீண்டகாலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காததால் ஏற்பட்ட மனமுறிவே இந்தத் தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தம்பதியினர் இருவரும் சேர்ந்து விஷத்தை குடித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவர்கள் வீட்டுக் கதவு திறக்கப்படாத நிலையில் இருந்தது. திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்ல கூட அந்த சிறுமி வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், மூவரின் சடலங்களையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட ஆலோசனை பெற, தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் 104 அல்லது சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+