Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1.5 கோடி மானியம் தந்த ஸ்டாலின்; Startup கம்பெனிகளின் சொர்க்கபுரி ஆன கோவை!

Subscribe to Oneindia Tamil

கோவை: இந்த ஆட்சிக்காலத்தில் தொழில்துறையில் முன்னேறி வருகிறது கோவை மாவட்டம். முதல்வர் ஸ்டாலினும் கோவை மீது சிறப்புக் கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

இந்த மாவட்டத்தின் மீது அவருக்குத் தனிப் பாசமே இருக்கிறது என்று சொல்லலாம். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு உச்சத்திலிருந்த காலத்தில் கோவைக்குச் சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின், பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு மிகத் தைரியமாக மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளைச் சந்தித்து உற்சாகப்படுத்திவிட்டு வந்தார்.

 Coimbatore is becoming the capital of startup companies

அந்தளவுக்குக் கோவையோடு அவருக்குப் பிணைப்பு இருந்துவருகிறது. அவர் ஆட்சிக்கு வந்த பிறகு கோவை சாலை பாதுகாப்புப் பணிகளுக்காக மட்டுமே 400 கோடி ரூபாய் ஒதுக்கித் தந்தார்.

மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய எலிவேஷன் ஃப்ளை ஓவர் ஒன்று அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 10 கிமீட்டர் வரை தரையைத் தொடாமல் வாகனங்கள் இதன்மூலம் நெரிசல் இன்றி செல்ல முடியும்.

 Coimbatore is becoming the capital of startup companies

இந்த மாவட்டத்தில்தான் இ பைக் உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, ஏரோ ஸ்பேஸ் என இந்தியாவுக்கே சவால் தரக்கூடிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆகவே முதல்வர் கவனம் இதன்மீது விழுந்தது வியப்பல்ல.

வெறும் உற்பத்தி சார்ந்து மட்டும் ஸ்டாலின் இந்த மாவட்டத்தில் கவனம் செலுத்தவில்லை. கோவையை ஒட்டி உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காப்பதற்காகவும் பலவேறு திட்டங்களை அவரது ஆட்சியில் தனித்துவமான திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். அதற்குச் சரியான சான்று, வரையாடு திட்டம்.

 Coimbatore is becoming the capital of startup companies

கோவை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திருமுருகன், "எங்கள் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 42 ஆயிரம் 'உதயம்' பதிவு உரிமம் பெற்ற குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கோயமுத்தூரை Manchester of South India என்று சொல்வோம். அந்த அளவுக்கு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களின் தாயகமாகக் கோவை விளங்கி வருகிறது.

முன்னதாக டெக்ஸ்டைல் நிறுவனங்களின் சொர்க்கபுரியாக கோவை விளங்கியது. இப்போது கூடுதலாக பொறியியல்துறை சார்ந்த உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இயந்திரங்கள் தயாரிப்பதற்கான நிறுவனங்களின் மையமாக விளங்கி இந்திய அளவில் வருகின்றது.

 Coimbatore is becoming the capital of startup companies

அதைத்தாண்டி கோவை மாவட்டம் குறுந்தொழில்களின் ஹப் என்றே சொல்லலாம். இங்குள்ள நிறுவனங்களில் ஏறக்குறைய 95% குறுந்தொழில் சார்ந்தவைதான். இயந்திர உதிரப் பாகங்கள் தயாரிப்புக்கு மட்டுமல்ல; மோட்டார் பம்பு தயாரிப்புகளில் இந்திய அளவில் மையமாக இருக்கிறது. இந்த மோட்டார் பம்பு இண்டர்ஸ்ட்ரி என்பது கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செக்டார்.

இவற்றைத் தாண்டி, வெட்கிரைண்டர் உற்பத்தி, கம்பிரஷர் உற்பத்தி, இப்போது சிறப்பாக வளந்து வரும் துறையான ஆட்டோ உதிரிப்பாகங்கள் உற்பத்தி, ஏரோஸ்பேஸ், டிஃபன்ஸ்காம்போனெண்ட் எனப் பலதுறைகள் சார்ந்த கலவை தொழிற்சாலைகளின் தாயகமாகக் கோவை வளர்ந்துவருகிறது.

 Coimbatore is becoming the capital of startup companies

இந்தத் தொழிற்சாலைகளைத் தாண்டி இப்போது ஜூவல்லரி செக்டார் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. மும்பைக்கு அடுத்தபடியான இடத்தில் கோவை மாநகரம்தான் இருந்துவருகிறது.

அப்படியே கோவை பக்கம் உள்ள பொள்ளாச்சியை எடுத்துக் கொண்டால், தென்னை சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட தொழில்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக விளங்கி வருகிறது. ஆக, சுருக்கமாகச் சொன்னால், கோவை பன்முகத்தன்மை கொண்ட மாவட்டம்" என்கிறார்

 Coimbatore is becoming the capital of startup companies

கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து பேசிய திருமுருகன், "தமிழ்நாடு அரசு சிறு,குறு நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு அதை விரிவுபடுத்துவதற்காகக் கடன் உதவியை அளித்து வருகிறார்கள். அதன்படி ஒரு கோடிக்குள் மதிப்பீடு உள்ள குறு நிறுவனங்கள் அதாவது 5 கோடிக்குள் விற்றுமுதல் உள்ள நிறுவனத்தைக் கோவையில் எந்தப் பகுதியில் ஆரம்பித்தாலும் 25% முதலீட்டு மானியம் மற்றும் கூடுதலாக 10% மானியம் சேர்த்து 35% முதலீட்டு மானியத்தை வழங்கி வருகிறோம்.

இவை அல்லாமல் 25 வகையான தொழில்துறை குறு,சிறு நிறுவனங்கள் யாராக இருந்தாலும் 5 கோடிவரை முதலீடு உள்ள நிறுவனங்களைக் கோவையில் தொடங்கினால் அதிகபட்சமாக 1 கோடியே 50 லட்சம் வரை மானியம் அளிக்கிறோம்.

 Coimbatore is becoming the capital of startup companies

முதலீட்டு மானியம் மட்டுமல்லாமல், மின் மானியம், ஊதிய பட்டியல் மானியம், பின்முனை வட்டி மானியம், தரச்சான்று மானியம் எனப் பல மானியங்களை வழங்கத் திட்டங்களை உருவாக்கித் தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதைக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களின் நிறுவனத்தை வளர்க்க, உட்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 57 கோடி ரூபாய் முதலீட்டு மானியம், மின் மானியம், ஊதிய பட்டியல் மானியம் வழங்கி இருக்கிறோம்" என்கிறார்.

 Coimbatore is becoming the capital of startup companies

மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ், "தமிழ்நாட்டில் சிறு,குறு தொழில்கள் சாந்த எந்த விசயமாக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் கோவையை மையமாகக் கொண்டுதான் நிகழ்ச்சிகள் நடத்துவார். அந்தளவுக்குக் கோவைக்கு அவர் சிறப்புக் கவனம் அளித்துவருகிறார். சமீபத்தில் கூட புத்தொழில் மாநாடு இங்கு நடைபெற்றது. புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க Needs scheme செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டுமுதல் முதற்கட்டமாக எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில் முனைவோருக்கான அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 Coimbatore is becoming the capital of startup companies

இதன்மூலம் தொழில்முனைவோராக வருவோருக்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏறக்குறைய முதலீடு செய்வதிலிருந்து 35% பணம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது" என்கிறார்.

"என் பெயர் கருப்பண்ணசாமி. நான் ஒரு தனியார் கம்பெனியில் 8 வருடங்கள் பணியாற்றிவிட்டு, 1988இல் தனியாக ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்போது மிகச் சிறிய அளவில், ஒரு லேத் மிஷின் மற்றும் ஒரு ட்ரிலிங் மிஷின் ஆகிய இரண்டையும் வைத்து தொழிலைத் தொடங்கினேன்.

 Coimbatore is becoming the capital of startup companies

இன்றைக்குப் பரணி குரூப் ஆர்கனைசேஷன் கிட்டத்தட்ட 500 பேருக்கு வேலை தரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. 3 தயாரிப்பு தொழிற்சாலைகளை வைத்துள்ளோம்.

ஹைட்ராலிக் பிரஸ் மானிபேக்சரிங் டிவிஷனை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் வெளிநாட்டிலிருந்துதான் எந்திரத்தை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அதில் நாங்கள் தனிக் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.

 Coimbatore is becoming the capital of startup companies

இதில் ஏன் இந்தியாவில் இந்த எந்திரங்களை நாம் ஏன் தயாரிக்கக் கூடாது என நினைத்தோம். சின்ன அளவில் முதலில் தயாரித்துப் பார்த்தோம். அது வெற்றி பெற்றது. நாங்கள் எங்களது பங்களிப்பாக ஆட்டோ மொபைல் துறைக்கு இந்தச் சேவையைச் செய்தோம்.

அப்போதுதான் தமிழ்நாடு அரசு மானியமாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதை அறிந்தோம். அதற்கு விண்ணப்பித்தோம். இதன் மூலம் மிகப்பெரிய நிதியுதவி எங்களுக்குக் கிடைக்கும் போது, அந்த லாபத்தைக் கொண்டு தொழிலாளிகளை அதிகப்படுத்தப் பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது. ஆகவே இத்திட்டத்தை அறிமுகம் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" என்கிறார்.

பல ஆண்டுகளாக இந்த நிறுவனம் இயங்கி வந்தாலும், அதை விரிவாக்கம் செய்ய அவர்கள் முயன்றது கடந்த சில ஆண்டு முன்புதான். இவர்கள் ஆட்டோ மொபைல் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறார்கள். எம்.எஸ்.எம்.இ பிரிவில் வரக்கூடிய பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.

இந்த திராவிட மாடல் ஆட்சியில் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை மானியமாக இந்த நிறுவனம் பெற்றுப் பயனடைந்துள்ளது. இந்த மானியம் கிடைக்கப்பெற்ற பிறகு இந்நிறுவனத்தின் கிளை நிறுவனங்களையும் மானியத்துடன் விரிவாக்கம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

இவரைப் போலவே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் ட்ரோன் மூலமாக வேளாண்மை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கி, அதற்கான மானியத்தையும் பெற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+