கோவை அருகே அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தற்காலிக பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது
கோவை: கோவை வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 தற்காலிக பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இங்குள்ள அரசு விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த 30 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சார்பாக இந்த கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு சமுதாயத்தில் எதாவது தொந்தரவு ஏற்பட்டதா என்பது குறித்து கேட்கப்பட்டது. அப்போது 7 மாணவிகள் எங்களுக்கு கல்லூரியில் பாலியல் தொந்தரவு இருந்தது என்று கூறினர்.
பாலியல் தொந்தரவினால் சரியாக படிக்க முடியவில்லை என்றும், நாங்கள் வெளியூர் என்பதால் இங்கு அரசு விடுதியில் தங்கி தான் படித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேனி தலைமையில் இது குறித்து வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி மகளிர் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள் 2 பேரும் தற்காலிக பேராசிரியர்கள் 2 பேருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடுவது, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அந்த கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேரை கைது செய்துள்ளனர். முரளிராஜ், சதீஷ்குமா, ராஜபாண்டியன் ஆகிய 3 தற்காலிக பேராசிரியர்களும், அன்பரசு என்ற ஆய்வக உதவியாளர் என 4 பேரி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications