பாஜக தேர்தல் கூட்டணி? சட்டென வந்த பதில்.. “கோமாளி கட்சிய பத்தி கேட்காதீங்க” செந்தில் பாலாஜி காட்டம்!

Subscribe to Oneindia Tamil

கோவை : பாஜக பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சமூக வலைதளங்களில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோமாளிகளை பற்றி கேட்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

இன்று கோவையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அப்போது அதிமுக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கோவையில் குற்றம்சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும், நாளை கோவை விமான நிலையம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்ற பின், நாளை மறுநாள் கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் உத்தரவுகளை வழங்கும் விழாவில் பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார்.

 திமுக செயற்குழு கூட்டம்

திமுக செயற்குழு கூட்டம்

திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை கோவைக்கு வருகை தர உள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

செந்தில் பாலாஜி பேட்டி

செந்தில் பாலாஜி பேட்டி

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "நாளை காலை 10 மணியளவில் முதலமைச்சர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதேபோல வருகின்ற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு முகாமில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் சிறப்பாக செய்வது குறித்து ஆலோசணை செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.

தமிழ்மகன் உசேனுக்கு பதில்

தமிழ்மகன் உசேனுக்கு பதில்

கோவையில் திமுக ஆட்சிக் காலத்தில் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "211 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலைகள் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போட வேண்டிய சாலைகள். கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள். இந்தச் சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை

அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை

அதிமுக ஆட்சியில் சில அலங்கார பணிகளுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்ற 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தற்போது 26 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் மார்ச் மாதத்திற்குள் துவங்கும். இதேபோல நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கும். கோவை மக்கள் மற்றும் தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையான விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 85 சதவீதம் நிறைவறைந்துள்ளது.

பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது

பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது

மீதமுள்ள பணிகளும் 2, 3 மாதங்களில் நிறைவு பெறும். பொத்தாம் பொதுவாக அரசியல் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது பேசக்கூடாது. இங்கு செய்யப்பட்டு வரும் பணிகளைப் பார்த்துவிட்டு அவர் கருத்து சொல்ல வேண்டும். கோவையில் நிலுவையில் உள்ள பாலங்கள் விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவிநாசி சாலை பாலப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனப் பதிலளித்தார்.

கோமாளிகளை பற்றி கேட்காதீங்க

கோமாளிகளை பற்றி கேட்காதீங்க

அப்போது பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோமாளிகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டாம், களத்திற்குச் சென்று கட்சியை வளர்க்கும் கட்சிகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோமாளிகளை பற்றி கேட்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+