Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரித்திரம் படைத்த திமுக அரசு.. முதலில் தினகரன் தன்னை காத்துக் கொள்ளட்டும்- எடப்பாடி பழனிசாமி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

கோவை : திமுக அரசு கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் ஒவ்வொரு முறையும் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கப்படுகிறது. இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரம் படைத்துள்ளனர். இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படலாம் என கிண்டல் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மேலும், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ், டிடிவி.தினகரன் அமலாக்கத்துறையில் இருந்து முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் எனத் தெரிவித்தார்.

கோவையில் அதிமுக பிரமுகர் இல்ல விழாவில் பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பின்னர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கமிஷன் ஆட்சி

கமிஷன் ஆட்சி

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கும் மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும் ரத்து செய்வதுமாக உள்ளது. கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500க்கும் மேற்பட்ட பணிகளை ரத்து செய்துள்ளனர். திமுக ஆட்சியில் 133 பணிகளுக்காக 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுப்பதற்கு முன்வரவில்லை.

வெள்ளலூர் பேருந்து நிலையம்

வெள்ளலூர் பேருந்து நிலையம்

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனையும் இந்த அரசு கைவிட இருப்பதாக தகவல் வருகிறது. தமிழக முதல்வருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் எல் அண்ட் டி சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதால் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அதிக விலைக்கு போகும் என்பது தான் பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு காரணம். இதனால் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுகிறது.

போராட்டம் நடத்துவோம்

போராட்டம் நடத்துவோம்

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். மெட்ரோ ரயில் திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். அத்திக்கடவு அவிநாசி திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். இந்த அரசின் மெத்தன போக்கினால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

 கிடப்பில் போட்டுவிட்டனர்

கிடப்பில் போட்டுவிட்டனர்

எந்த திட்டத்தையும் இவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை. மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகள் அதிமுக ஆட்சியில் வேகமாக செயல்பட்டு வந்தன. ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் போதுமான நிதி ஒதுக்காத காரணத்தினால் அதுவும் முடங்கி இருக்கிறது." எனத் தெரிவித்தார்.

கும்பகர்ணன் அரசு

கும்பகர்ணன் அரசு

மேலும் பேசிய அவர், "மின்கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் போது கூறிய பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் முதியோர் ஓய்வூதிய உயர்வு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர். இந்த அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் ஒவ்வொரு முறையும் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.

கமிட்டி அரசு

கமிட்டி அரசு

திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கப்படுகிறது. இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரம் படைத்துள்ளனர். ஒருவேளை இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படலாம். தற்போது சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யாமல் கருத்து கேட்பு கூட்டம் மட்டுமே நடத்தும் அரசாக இந்த அரசு உள்ளது. இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்." என்றார்.

வேடந்தாங்கல் பறவை

வேடந்தாங்கல் பறவை

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "அவரை நம்பி அதிமுக இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேடந்தாங்கல் பறவை போல காலத்திற்கு ஏற்ப ஆறுகுட்டி செயல்பட்டு இருக்கிறார்" என்று பதிலளித்தார்.

அவரை காப்பாற்றிக் கொள்ளட்டும்

அவரை காப்பாற்றிக் கொள்ளட்டும்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் அமலாக்கத்துறையில் இருந்து முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+