கோவை வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்.. வனத்துறை முக்கிய அறிவுறுத்தல்
கோவை: கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அடுத்த 4 மாதங்களுக்குச் சென்று வரவுள்ளனர். மலை ஏறுபவர்கள் பிளாஸ்டிக்கை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காட்டின் சூழலை மாற்றாமல் பக்தர்கள் மலையில் பயணிக்க வேண்டியதும் மிகவும் அவசியம் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பக்தர்களும், தென்னிந்தியா மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் மலை ஏறத் தொடங்கி உள்ளனர்.

சுயம்பு லிங்கம்
ஏழு மலைகளைக் கடந்து சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றர். வரும் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கட்டாயமாக பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்தியாவசியத் தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஒரு பிளாஸ்டிக் பொருளுக்கு ரூ. 20 பக்தர்கள் செலுத்தி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பிளாஸ்டிக்கை தவிர்க்க அறிவுறுத்தல்
பக்தர்கள் மீண்டும் மலையில் இருந்து இறங்கும்போது, அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் மலை அடிவாரத்தில் சோதனை தொடர்ந்து நடைபெறும். மல்டி லேயர் பிளாஸ்டிக், சாக்லெட், குறிப்பாக ஒரு ரூபாய் சாக்லெட்டுகள் என மொத்தமாக பக்தர்கள் வாங்கி வருகிறார்கள். அவர்களுக்கு சாக்லெட் கவர்களை பிரித்து, மொத்தமாக ஒப்படைத்துவிடுகிறோம். அந்தளவுக்கு மலை அடிவாரத்தில் நுழைவாயில் பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு தணிக்கை பணி நடைபெறுகிறது.
விழிப்புணர்வு பதாகை
ஆறாவது மலையான ஆண்டிசுனையில் குளிக்கும் பக்தர்கள் ஆடைகளை அங்கேயே போட்டு விட்டு வராமல் இருக்கும் வகையில், விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மலைக்குச் செல்லும் பக்தர்கள் முடிந்த வரை, மலையை அதே நிலையில் தூய்மையாகப் பராமரிக்க வேண்டியது அனைவரின் கூட்டு பொறுப்பாகும். மலை மற்றும் மலையடிவாரத்தில் பறிமுதல் மற்றும் அப்புறப்படுத்தப்படும் துணி மற்றும் பிளாஸ்டிக் கடந்த ஆண்டு 28 டன் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 18 டன் ஆக இருந்தது.
விதைப்பந்துகள்
போளுவாம்பட்டி வனச்சரகர் கூறுகையில், மலையில் எங்கும் வேம்பு, புங்கன், புளியமரக்கன்றுகள் உட்பட மரக்கன்றுகளை நடக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதேபோல, விதைப் பந்துகளை எடுத்துச் செல்லக் கூடாது. காட்டின் சூழலை மாற்றாமல் இருப்பதும், இந்த பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சில பக்தர்கள் கட்டுப்பாட்டை மீறி மரக்கன்றுகளை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக..
பக்தர்களின் வசதிக்காக மருத்துவக்குழு 1 மற்றும் 3-வது மலைகளில் உள்ளனர். மலைகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் அனுமதிப்பதில்லை. முறுக்கு, மிக்சர் உள்ளிட்டவற்றை பாலித்தின் கவரில் வைத்து விற்பதும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் பாலித்தின் கவர்களை நொறுக்கு தீனிகள் விற்பதை தடுக்கும் வகையில், பாட்டில்கள் வசதி கடைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications