ஆளுநரை 21ம் தேதி சந்தித்து.. பாஸ்போர்ட் ஊழல் பற்றி அறிக்கை கொடுப்பேன்.. சொல்கிறார் அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

கோவை: பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அறிக்கையளிக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் கொம்பட்டி காலனி அருகே சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் சார்பாக மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் வாகன சேவையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், அண்மையில் பாஸ்போர்ட் ஊழல் குறித்து பேசியிருந்தோம். அந்த ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை வரும் 21ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்க உள்ளோம். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேச பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் . மதுரையை மையமாக வைத்து காவல்துறை உதவியுடன் போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார்கள் என்று குற்றம்சாட்டினார்.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதன் மூலம் சென்னை சர்வதேச வரைபடைத்தில் இடம்பெற உள்ளது. இதன்மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். ஏதோ ஒரு விளம்பரம் செய்தேன் என்று இல்லாமல், செஸ் போட்டியை முதன்மைபடுத்த வேண்டும். செஸ் ஆளுமைகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக பற்றி கருத்து

அதிமுக பற்றி கருத்து

தொடர்ந்து அதிமுக விவகாரத்தில் பாஜக எப்போதும் பேசாது. வாஜ்பாய் காலத்தில் இருந்தே பாஜக எப்போதும் உட்கட்சி விவகாரங்களில் தலையிடாது. பாஜக - அதிமுக இடையே நட்பு உள்ளது. அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வர். ஆனால் ஓபிஎஸ் - இபிஎஸ் உடனான தனிப்பட்ட நட்பு தொடர்கிறது என்று கூறினார்.

திமுக மீது விமர்சனம்

திமுக மீது விமர்சனம்

அதேபோல் அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல் திமுகவில் உள்ளவர்களுக்கு ஆளுநரை குறை சொல்லாவிட்டால் தூக்கம் வராது. ஆளுநர் நடவடிக்கையில் யாரும் குற்றம்சாட்ட முடியாது. சனாதனம், திராவிடம் என்று எதைப் பற்றி பேசினாலும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர் என்று விமர்சித்தார்.

திமுகவுடன் பகை?

திமுகவுடன் பகை?

தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் விவகாரத்தில் கி.வீரமணி ஏன் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. நியாயமாக அவர் திமுகவுக்கு தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும். திமுகவை பாஜக விமர்சிக்கவே செய்கிறது. மத்திய அரசின் திட்டங்களை வைத்து திமுக ஆட்சி செய்கிறது. பாஜகவுக்கும் திமுகவுக்கும் தனிப்பட்ட பகைமை கிடையாது. கொள்கை அடிப்படையில் வேறுவேறு. திமுகவின் தவறை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+