ரஸ்க் பாக்கெட்டில் பல்லி... சாப்பிட்டவரின் கதி என்ன? கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை: கோவையில் பிரபல ரஸ்க் நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட்டில் பல்லி இருப்பது போல் புகைப்படம் வைரல் ஆனதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
கோவையில் கிருஷ்ணசாமி என்ற முதியவர் வாங்கி வந்த ரஸ்க் பாக்கெட்டில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது.
ரஸ்க் பாக்கெட்டில் பல்லி இருப்பது போல் புகைப்படம் வைரல் ஆக இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

பேக்கரியில் ரஸ்க்
கோவை வெங்கடேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல் காரணமாக வழக்கமான உணவு உட்கொள்ள முடியாது என்பதால் பிரெட், ரஸ்க் உள்ளிட்ட திண்பண்டங்களைத்தான் வாங்கி சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்னர் அருகில் இருந்த பேக்கரிக்கு சென்ற கிருஷ்ணசாமி பிரபல நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட்டை வாங்கி வந்துள்ளார்.

குழந்தைகள் விரும்பும் ரஸ்க்
கடந்த 4 நாட்களாக ரஸ்க் சாப்பிட்டு வந்த நிலையில் கடைசியாக இருந்த ரஸ்க் துண்டை இன்று எடுத்துள்ளார். அப்போது இரண்டு ரஸ்க் துண்டுகளுக்கு இடையில் இறந்து போன பல்லி இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து ரஸ்க் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இதைப் பற்றி குடும்ப உறுப்பினர்களை அழைத்துத் தெரிவித்தார்.

குழந்தை சாப்பிட்டிருந்தால்?
கடந்த 3 நாட்களாக கிருஷ்ணசாமி அந்த ரஸ்க்கை சாப்பிட்டுவந்த நிலையில் இன்று பல்லி இருந்ததை பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து பல்லி இருக்கும் ரஸ்க் பாக்கெட்டை படம்பிடித்த கிருஷ்ணசாமி சமூகவலைதளங்களில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

புகார் அளிக்க முடிவு
இதுகுறித்து பேசிய கிருஷ்ணசாமி, எங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கின்றனர். எனக்குப் பதிலாக அவர்கள் இந்த ரஸ்க்கை சாப்பிட்டிருந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்குமே என அச்சம் தெரிவித்தார். எனவே இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளேன் என கூறினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் சாப்பிடும் அந்த பிரபல நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட்டிலேயே பல்லி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications