கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமா போனது தப்புத்தான்.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. கைதுக்கு பின் டிடிஎப் வாசன் மனமாற்றம்

Google Oneindia Tamil News

கோவை: டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் வேகமாக சென்று சர்ச்சையில் சிக்கிய நிலையில் இன்னொரு வழக்கில் டிடிஎப் வாசனை நேற்று சூலூர் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த வந்த, ‛‛நான் வேகமாக சென்றது தவறுதான். இனி வேகமாக செல்ல மாட்டேன்'' என கூறியுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் 22 வயது வாசன். யூடியூப் சேனல் நடத்தி வரும் பைக்கில் வேகமாக சென்று வீடியோக்கள் பதிவேற்றம் செய்து வருகிறார்.

தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கு சென்று பைக்கில் சாகசம் செய்து வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

குவார்ட்டர், செமி.. 'ஞாபகம் இருக்கா?’ - ஃபைனலும் எடப்பாடி பழனிசாமி தான்.. ஈபிஎஸ் டீம் போடும் கணக்கு! குவார்ட்டர், செமி.. 'ஞாபகம் இருக்கா?’ - ஃபைனலும் எடப்பாடி பழனிசாமி தான்.. ஈபிஎஸ் டீம் போடும் கணக்கு!

243 கிமீ வேக பயணம்

243 கிமீ வேக பயணம்

இவர் சமீபகாலமாக பைக்கில் வேகமாக சென்று சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு 243 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கில் சென்ற வீடியோ வெளியானது. இது பெரும் விவாதப்பொருளானது. டிடிஎப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் போலீஸ் நிலையங்களிலும் அவர் மீது புகார்கள் செய்யப்பட்டன.

ஜிபி முத்துவுடன் பயணம்

ஜிபி முத்துவுடன் பயணம்

இதற்கு மத்தியில் தான் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன், டிடிஎப் வாசன் பைக்கில் ஒரு ரைட் செய்தார். இதில் டிடிஎப் வாசன் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் ஜிபி முத்து தலைக்கவசம் அணியவில்லை. இந்நிலையில் தான் டிடிஎப் வாசன் சாலையின் எதிர்ப்புறத்தில் வாகனங்கள் வந்தாலும் கூட அதனை பொருட்படுத்தாமல் வேகமாக பைக் ஓட்டினார். அவர் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி சென்றார். இதில் பயந்துபோன ஜிபி முத்து பயம் கலந்த மகிழ்ச்சியில் அலறினார்.

போத்தனூர் வழக்கில் சரண்

போத்தனூர் வழக்கில் சரண்

இதுதொடர்பான வீடியோவும் இணையதளத்தில் வேகமாக பரவியது. கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கோவை பாலக்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய யூடியூபர் வாசன் மீது கோவை போத்தனூர், சூலூர் போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். இதில் போத்தனூர் போலீஸ் வழக்கு தொடர்பாக டிடிஎப் வாசன் சில நாட்களுக்கு முன்பு சரணடைந்து ஜாமீன் பெற்றார். இருப்பினும் சூலூர் போலீசார் டிடிஎப் வாசனை தேடி வந்தனர்.

மீண்டும் கைது-ஜாமீன்

மீண்டும் கைது-ஜாமீன்

இந்நிலையில் சேலம் -கொச்சின் நெடுஞ்சாலையில் அதிவேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் பைக்கை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனை சூலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பெங்களூர் சென்ற நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவரை போலீசார் ஜாமீனில் வெளியே விட்டனர். இதுபற்றி டிடிஎப் வாசன் கூறியதாவது:

வேகமாக போகமாட்டேன்

வேகமாக போகமாட்டேன்

‛‛இன்று (அதாவது நேற்று)சூலூர் போலீஸ் வந்துருக்கிறேன். வழக்கு போடப்பட்டு இருந்தது. அதுசம்பந்தமாக தான் வந்தேன். நான் ஸ்பீடா போனது தப்புனு உணர்ந்து ஏற்கனவே வீடியோவாக பதிவிட்டு இருந்தேன். இனிமேல் வேகமாக போகமாட்டேனும் ஸ்டேஷனில் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்.

தவறுதான் இனி செய்யமாட்டேன்

தவறுதான் இனி செய்யமாட்டேன்

நான் சமீபத்தில் கோட் அணிந்து ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தேன். சில மீடியாக்கள் அதனை காவல் துறையை சீண்டுவதாக போலியாக செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன. உண்மையில் நான் சவால் எதுவும் விடவில்லை. நார்மல் வீடியோவை எடுத்து தவறான வகையில் செய்தியாக வெளியிட்டு விட்டனர். நான் படிப்படியாக வேகத்தை குறைத்து வருகிறேன். நான் வேகமாக சென்றது தவறு தான். இனிமேல் அதனை செய்யமாட்டேன்'' என கூறியுள்ளார்.

முந்தைய வீடியோவில் கூறியது என்ன?

முந்தைய வீடியோவில் கூறியது என்ன?

முன்னதாக 3 நாட்களுக்கு முன்பு டிடிஎப் வாசன் ஊடகங்களை எச்சரிக்கும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இந்த டிடிஎப் பவர் தெரியாமல் நியூஸ் சேனல்ஸ் விளையாடிட்டு இருக்கிங்கனு கேட்க தோணுது.. ஆனா, கேட்க மாட்டேன். சுமூகமா போயிடலாம்னுதான் நான் நினைச்சிட்டு இருக்கேன். நியூஸ் சேனல்ஸ் பார்த்து பயம் கிடையாது, யாரை பார்த்தும் பயம் கிடையாது. எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீங்க எல்லையை கடந்து செல்கிறீர்கள்.. அதுக்கும் மேல போன, எல்லா யூ டியூபர்ஸும் சேர்ந்து நீங்கள் பண்ணும் வேலைகள் பற்றி பேச வேண்டி இருக்கும். எனவே, கட்டுப்பாடுடன் இருந்துகோங்க.. பொய் செய்தி எல்லாம் பரப்பாதீங்க. இது மிரட்டல் எல்லாம் கிடையாது'' என வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது அவர் தான் செய்தது தவறுதான் எனக்கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sulur police arrested TTF Vasan yesterday, who was involved in a controversy by speeding on a bike with Tik Tok celebrity GP Muthu. After that, he came out on bail and said, It was wrong for me to speed. I will not go fast anymore'' he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X