Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிளேட்டை" மாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்.. வசமாக சிக்கி.. 1 லட்சம் அபராதம் போட்ட கமிஷன்.. என்னாச்சு?

இன்ஸ்பெக்டருக்கு மனித உரிமை கமிஷன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

கோவை: ஒரு சாதாரண குடும்ப பிரச்சனையை, வரதட்சணை வழக்காக மாற்றி உள்ளார் ஒரு பெண் இன்ஸ்பெக்டர்.. என்ன நடந்தது?

கோவை மாவட்டம் சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்.. இவர் ஒரு என்ஜினீயர்... இவர் சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2019-ல் இவருடைய மனைவி, திடீரென விஜயகுமார் மீது கோவை துடியலூர் மகளிர் போலீஸில் புகார் தந்தார்.. அந்த புகாரை அப்போது பெற்றுக் கொண்டவர் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை என்பவராவார்.

மீனாம்பிகை

மீனாம்பிகை

புகாரை பெற்றதுடன், விஜயகுமார் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகவும் கைது செய்தார் மீனாம்பிகை. ஆனால், வழக்கு பதிவு செய்ததும் விஜயகுமாரை விசாரிக்கவில்லை என தெரிகிறது.. இதையடுத்து, விஜயகுமார் 5 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்... இதனிடையே மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார் விஜயகுமார்.

 வரதட்சணை

வரதட்சணை

அந்த புகார் மனுவில், "என் மனைவி என் மீது கொடுத்த புகார் சாதாரணதுதான்.. அது வெறும் குடும்ப தகராறு தொடர்பானதுதான்... ஆனால் அந்த புகாரை முறையாக விசாரிக்காமல் என் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் தவறாக வழக்குப்பதிவு செய்து ஜெயிலிலும் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை என்னை அடைத்துவிட்டார்.. அதனால், மனஉளைச்சலை ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயகுமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தார்.

இழப்பீடு

இழப்பீடு

இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், இன்ஸ்பெக்டர் மீனாம்பிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.. அந்த தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.. இதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் அதிரடியாக தெரிவித்துள்ளது.

அல்லிநகரம்

அல்லிநகரம்

ஒரு சாதாரண குடும்ப பிரச்சனையை வரதட்சணை வழக்காக மாற்றிய இன்ஸ்பெக்டருக்கு மனித உரிமை கமிஷன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இப்படித்தான், சில மாதங்களுக்குமுன்பு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அல்லிநகரம் பெண் இன்ஸ்பெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+