Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மாணவி கொலை வழக்கில் திருப்பம்.. பழகிய குடும்ப நண்பரே பலாத்காரம் செய்து கொன்ற கொடுமை

கோவை மாணவி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பமாக குடும்ப நண்பராக பழகிய நபரே கொலை செய்தது தெரியவந்துள்ளது. நகைக்காக கொலை செய்து விட்டு நாடகமாடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கோவை: 2 பவுன் நகைக்காக பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்று விட்டு நாடகமாடிய கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குடும்ப நண்பர் போல பழகிய நபரே மாணவியை கொன்று விட்டு சாக்குமூட்டையில் கட்சி வீசியது கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி கடந்த 13ஆம் தேதி முதல் மாயமானார். மகளைக் காணவில்லை என்று தேடிப்பார்த்த மாணவியின் தாயார், கோவை கிழக்கு பகுதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு மாணவியை தேடி வந்தனர்.

சரவணம்பட்டி யமுனா நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் கிடந்த சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சாக்குமூட்டையை திறந்து பார்த்தபோது, அது காணாமல் போன மாணவி என்பது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டும் , வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டுமிருந்தது.

கட்டிடத் தொழிலாளி

கட்டிடத் தொழிலாளி

மாணவியை யாராவது கொலை செய்து விட்டு, உடலை இங்கு வீசியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் அதில், அவர் யாருக்கெல்லாம் போன் செய்துள்ளார். அவருடன் கடைசியாக பேசியவர்கள் யார் யார் என்று தேடினர். அப்போது மாணவி, மாயமான நாளன்று கடைசியாக அதே பகுதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான முத்து குமார்,44 என்பவரிடம் பேசியது தெரியவந்தது.

கொலையானது எப்படி

கொலையானது எப்படி

இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். முதலில் காவல்துறையினர் கேள்விகளுக்கு மாறி, மாறி பதில் அளித்த முத்துக்குமார், கடைசியில் தான் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை நடந்தது எப்படி என்று விரிவாக கூறவே, அதைக்கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

தங்க நகை

தங்க நகை

இறந்த மாணவியின் தாயார் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும், கட்டிடத்தொழிலாளியான முத்துக்குமாருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் ஏற்கனவே திருமணமானவர். தனது குடும்ப செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மாணவியின் தாயாரிடம் 2 பவுன் நகையை கடனாக வாங்கிச் சென்றிருந்தார். அந்த நகையை அவர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

பொய் சொன்ன முத்துக்குமார்

பொய் சொன்ன முத்துக்குமார்

நகை பற்றி மாணவியின் தாயார் முத்துக்குமாரிடம் கேட்டபோது சில நாட்களில் திருப்பி தந்து விடுவதாக தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தாயார் ஊருக்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு சென்ற முத்துக்குமார், அங்கு பள்ளி மாணவி மட்டுமே இருந்தார். அவரிடம், பேசிய முத்துக்குமார், எனக்கு ஒரு உதவி செய், நகையை நான் திருப்பி தந்து விட்டதாக உனது தாயாருக்கு போன் செய்து சொல்லி விடு, நான் நாளைக்கே அந்த நகையை உன்னிடம் வந்து கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.

காத்திருந்த அதிர்ச்சி

காத்திருந்த அதிர்ச்சி

அதனை நம்பிய மாணவியும் தனது தாயாரிடம் போன் செய்து, முத்துக்குமார் நகையை திருப்பி கொடுத்து விட்டதாக கூறினார். மறுநாள் மாணவிக்கு போன் செய்த முத்துக்குமார், நகையை வாங்கி விட்டதாகவும், தன்னுடைய வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள் என்றும் கூறினார். இதனை உண்மை என்று நம்பிய மாணவி, நகையை வாங்குவதற்காக முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்றதும் நகையை தருமாறு கேட்டார். அதற்கு சிறிது நேரம் காத்திரு என்று கூறிய அவர், மாணவியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்தார். அதிர்ச்சியான மாணவி கூச்சலிட்டு சத்தம் போட்டார்.

மாணவி மரணம்

மாணவி மரணம்

உடனே மாணவியின் வாயில் துணியை திணித்து கீழே தள்ளிய முத்துக்குமார், பலாத்காரம் செய்தார். இதில் மாணவி மயங்கி விழந்து மூர்ச்சையானார். நீண்ட நேரமாகியும் மாணவி எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த முத்துக்குமார் மாணவியின் கையை பிடித்து பார்த்தார். அவர் இறந்து விட்டது தெரியவரவே என்ன செய்வதென்று யோசித்து உடலை அப்புறப்படுத்த திட்டமிட்டார்.

சாக்கு மூட்டையில் சடலம்

சாக்கு மூட்டையில் சடலம்

வீட்டில் இருந்து சாக்குமூட்டையில் மாணவியின் உடலை கட்டி குப்பை கிடங்கில் வீசி விட்டு அமைதியாக எதுவும் தெரியாதது போல இருந்து விட்டார். மகளை காணாத தாயார், முத்துக்குமாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் தான் பார்க்கவில்லை என்றும், நான் உன்னிடம் வாங்கிய நகையை அவளிடம் கொடுத்தேன். அதனை வாங்கி கொண்டு ஓடியிருப்பாள் என்றும் மாணவி பற்றி தவறாக கூறி திசை திருப்பினார். காவல் நிலையத்திற்கு சென்று புகாரும் கொடுத்து விட்டு தேடினார். மாணவியின் உடலை கைப்பற்றிய போது தாயார் கதறி அழுத போது தானும் அழுதும் நாடகமாடியுள்ளார்.

கூடவே இருந்த கொலையாளி

கூடவே இருந்த கொலையாளி

குடும்ப நண்பரைப் போல பழகி நகையையும் கடனாக வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதோடு மகள் வயதுடைய பெண்ணையும் கொலை செய்து விட்டு கூடவே இருந்து நாடகமாடியுள்ளான் கொடூர கொலைகாரன். இந்த சம்பவம் கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+