கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை நகரம் வேறு லெவலில் வளரும்.. மாஸ்டர் பிளான் ரெடி! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த முக்கிய திட்டங்கள்

கோவை மாநகருக்கான மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது; அரசின் லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம்.கோவை மாநகருக்கான மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும்.

கோவை மற்றும் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் நேற்று கோவை சென்றிருந்த நிலையில் இன்று காலை கோவை வ உசி மைதானத்தில் அகழாய்வு கண்காட்சியை திறந்து வைத்தார். அதேபோல் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 'ஓராண்டு சாதனைகள் ஓவியங்களாய்' என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் முனைவோர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், 'திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5 தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியுள்ளோம்.

தொழில்களின் மையம் கோவை

தொழில்களின் மையம் கோவை

பல்வேறு தொழில்களின் மையமாக விளங்குகிறது கோவை. தகவல் தொழில்நுட்பத்துறையிலும் கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை. ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது; அரசின் லட்சியத்தை அடைய கோவை மாவட்டத்தின் பங்களிப்பு முக்கியம். கோவை மாநகருக்கான மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும். திட்டம்

131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 69,000 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தெற்கு ஆசியாவிலேயே முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என செயலாற்றுகிறோம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும்.

கயிறு உற்பத்தி

கயிறு உற்பத்தி

கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கயிறு வணிக மேம்பாட்டு மையம் கோவையில் அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.3.5 கோடியில் மஞ்சள் தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் செய்வதற்கான உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

 பருத்தி, நூல் விலை உயர்வு

பருத்தி, நூல் விலை உயர்வு

கோவைக்கான பெருநகர வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும். 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பட்டறைகள் உருவாக்கப்படும். சிப் எனப்படும் செமி கண்டக்டர் உற்பத்தியில் கோவை தொழில்துறையின் கவனம் செலுத்த வேண்டும். பருத்தி, நூல் விலையை குறைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா

அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா

தமிழ்நாட்டில் உள்ள திறமைமிக்க மனிதவளத்தை மேம்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் நிறுவப்படும் என தெரிவித்திருந்தோம். அதன்படி அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
MK Stalin Speech in Coimbatore: (கோவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு) Coimbatore is the second largest IT city after Chennai; The contribution of Coimbatore district is important to achieve the goal of the government. A master plan for the city of Coimbatore will be developed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X