கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாமலைக்கு நேரம் சரியில்லை.. முதல் பேட்டி தந்த அடுத்த நாளே பாய்ந்தது.. விதி மீறல் வழக்கு!

லாக்டவுன் விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக பாஜகவில் சமீபத்தில் இணைந்த அண்ணாமலை, கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

கோவை: மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள லாக்டவுன் விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக கூறி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு முதன்முறையாக கோவைக்கு வந்த அவருக்கு சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

Police case file against former Ips and BJP worker Annamalai

இதைத்தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இளைஞர்கள் பாஜகவிற்கு அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.

கொரோனா லாக்டவுன் விதிமுறைகள் அமலில் உள்ள இந்த நேரத்தில் எப்படி இத்தனை நிர்வாகிகள் ஒன்றிணைந்தார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இன்று அண்ணாமலை, எஸ்.ஆர்.சேகர் உள்பட 5 பேர் மீது காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லாக்டவுன் விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக அண்ணாமலை, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"எனக்கு வேற வழி தெரியலம்மா".. உடல் வெந்து கதறிய கணவர்.. பேங்க் வாசலில் கொடூரம்.. அதிர்ச்சியில் தஞ்சை

Recommended Video

    பாஜகவில் இணைந்த முன்னாள் IPS அண்ணாமலை

    கொரோனா லாக்டவுன் விதிகளை மீறி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 143, 341, 269, 285 ஆகியவற்றின் கீழும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 3ன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    English summary
    Police have registered a case against former IPS officer Annamalai, BJP Coimbatore district chief Nandakumar, state general secretary GK Selvakumar, state treasurer SR Sehgar and state vice president Kanakasabapathy for allegedly violating the lockdown rules announced by the central government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X