கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் மீதான சோசியல் மீடியா விமர்சன குப்பையிலும் தாமரையை மலரச் செய்வேன்: மாஜி ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

Google Oneindia Tamil News

கோவை: சமூக வலைதளங்களில் விமர்சனம் எனும் குப்பைகளை என் மீது போடுகிறார்கள்.. ஆனால் , அந்த குப்பையிலும் தாமரையை வளர்ப்பேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்..

Recommended Video

    பாஜகவில் இணைந்த முன்னாள் IPS அண்ணாமலை

    கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக கட்சியில் இணைந்ததில் பெருமையடைகிறேன். பாஜக சாதாரண மனிதனுக்கான கட்சி. 2021 சட்டமன்ற தேர்தலில் திருப்பு முனை ஏற்படும்.

    எனக்கு பாஜக மேலிடம் கட்சியில் பொறுப்பு கொடுக்கும் . தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எங்கு போட்டியிடுவது என்பது குறித்தும் கட்சி தலைமை முடிவெடுக்கும். எனக்க கட்சியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனது அரசியல் தமிழ்நாட்டை நோக்கியே உள்ளது. தமிழ்நாட்டிற்கு மாற்றுப்பாதை தேவை. பாஜக தமிழ்நாட்டில் முக்கியமான சக்தியாக வரும்.

    நமீதா, கல்வெட்டு ரவி, அண்ணாமலை.. புதுசு கண்ணா புதுசு.. பாஜகவில் குவியும் புது முகங்கள்..! நமீதா, கல்வெட்டு ரவி, அண்ணாமலை.. புதுசு கண்ணா புதுசு.. பாஜகவில் குவியும் புது முகங்கள்..!

    வெள்ளை அறிக்கை

    வெள்ளை அறிக்கை

    புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டை பாஜக புறக்கணிக்கவில்லை. எனவே தமிழர்களுக்கு எதிரான கட்சி என பாஜகவை எப்படி சொல்ல முடியும் . திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழுக்காக செய்தவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    காவிரி நீர் விவகாரம்

    காவிரி நீர் விவகாரம்

    தேர்தல் கூட்டணி பற்றி கேட்கிறீர்கள்., அதை பற்றி பேச தனக்கு தகுதியில்லை.

    கர்நாடகாவில் மழை குறைவாக பெய்யும் போது தான் காவிரி நீர் பிரச்சனை வருகிறது. , மத்திய அரசு காவிரி நதி நீர் விவகாரத்தில் அநியாயம் செய்யவில்லை. இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. தமிழுக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனினும், பல மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது .

    கண்டனத்திற்கு உரியது

    கண்டனத்திற்கு உரியது

    நீட் தேர்வு வேண்டாம் என்றால் மாற்று என்ன? , நீட் தேர்வை அரசால் நடத்த முடியும்/ வசதிகளை செய்து கொடுத்து நீட் தேர்வு நடத்த வேண்டும்/ ஆயுஸ் கூட்டத்தில் இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்னது கண்டனத்திற்குரியது. அதற்காக ஒரு அரசு அதிகாரி சொன்னதை அரசின் கொள்கையாக நினைக்கக்கூடாது.

    தாமரையை வளர்ப்போம்

    தாமரையை வளர்ப்போம்

    தமிழ்நாட்டை பற்றி நாடாளுமன்றத்தில் பேச தலைவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி இல்லை . சமூக வலைதளங்களில் விமர்சனம் எனும் குப்பைகளை தன் மீது போடுகிறார்கள். அந்த குப்பையில் தாமரையை வளர்ப்போம்" இவ்வாறு கூறினார்.

    English summary
    Former IPS officer Annamalai said that They put rubbish called criticism on me on social websites but Let’s grow lotus in that trash
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X