போலீஸ் வழக்குலாம் எனக்கு துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி! சவால் விட்டு பஞ்ச் பேசிய டிடிஎஃப் வாசன்
கோவை: வழக்குகள் எல்லாம் எனக்கு துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி என மீண்டும் போலீஸுக்கு சவால் விடும் வகையில் பேசிய டிடிஎஃப் வாசன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Twin throttlers எனும் யூடியூப் சேனலை வைத்து நடத்தி வருகிறார் டிடிஎஃப் வாசன். இவர் பைக் சாகசங்களை செய்து அதை வீடியோவாக எடுத்து ஏராளமான ரசிகர்களை சப்ஸ்கிரைபர்களாக கொண்டுள்ளார்.
இந்த சேனலுக்கு 3.38 மில்லியன் பேர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை 10 மில்லியனாக உயர்த்த வாசன் நிறைய சாகசங்களை செய்து வருகிறார். இவருக்கு 2கே கிட்ஸ்தான் அதிகம் பேர் ரசிகர்களாக உள்ளனர்.

சினிமா நடிகர் நடிகைகள்
இவர் எங்காவது வருகிறார் என்றால் அது திருவிழா போலவும் சினிமா நடிகர், நடிகைகளை காண வந்ததும் போலவும் கூட்டம் திரண்டு வரும். இது போல் கூட்டத்தை கூட்டியதற்காகவே டிடிஎஃப் வாசன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2 கே கிட்ஸ்களை கவரும் விதமாக பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது என தொடர்ந்து வீடியோக்களை வாசன் வெளியிட்டு வந்தார்.

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து
அண்மையில் கூட டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது பைக்கில் உட்காரவைத்துக் கொண்டு நெடுஞ்சாலையில் அதிகவேகத்தில் சென்றார். மேலும் பின்னால் உட்கார்ந்திருந்த முத்து ஹெல்மெட் போடவில்லை. இது போல் அதிக சிசி வண்டியில் அதிவேகமாக சாகசம் செய்து ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக டிடிஎஃப் வாசன் இருக்கிறார் என புகார்கள் குவிந்தன.

சாகசம்
எனினும் அவ்வப்போது டிடிஎஃப் வாசனை அழைத்து எச்சரிப்பதும் அவர் மீண்டும் பழையபடி சாகசம் செய்வதுமாக இருந்தனர். ஜி பி முத்து விவகாரத்தில் போத்தனூர் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கும், சூலூர் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎஃப் வாசன் இந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றார். இதையடுத்து தன்னை பற்றி ஊடகத்தினர் அவதூறு பரப்புவதாக எச்சரிக்கை விடுத்து வீடியோக்களை டிடிஎஃப் வாசன் வெளியிட்டிருந்தார்.

சர்ச்சைக்குரிய வீடியோ
அதன்பின் சில மாதங்கள் எந்தவித சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் வெளியிடாமலும், பிரச்சனைகளில் சிக்காமலும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூரில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சினிமா அலுவலகம் ஒன்றை டிடிஎஃப் வாசன் திறந்து வைக்க சென்றிருந்தார். அப்போது வாசனை பார்க்க ஏராளமான யூடியூப் பாலோயர்ஸ்களும் இளைஞர்களும் வந்து பைக்குகளில் ஹாரன்களை அதிக அளவுக்கு ஒலிக்கவிட்டு அமர்க்களம் செய்தனர்.

தடியடி
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் அவருடைய யூடியூப் நேரலையில், போலீசுக்கு சவால் விடும் தொனியில் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். தான் வழக்குகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதெல்லாம் துணிக்கடைக்கு போய் கட்டப்பை வாங்கிட்டு வர்ற மாதிரி. என்மீது கைவச்சா கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் பசங்க மேல கைவச்சதை தான் தாங்கிக்க முடியல. யாரெல்லாம் விரட்டி அடித்தார்களோ அவர்களே ராஜ மரியாதையாடு நம்மை உட்கார வைப்பார்கள். இப்படி ஒருத்தன தொடர்ந்து குத்திக்கிட்டே இருந்தா அவன் ஆலமரமா வளர்றதவிட அசுர மரமா வளர்ந்திடுவான்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்கும் வாசனின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து அந்த வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications