கோவை கொடூரச் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த வானதி சீனிவாசன்.. திமுக அரசு மீது சரமாரி தாக்கு
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் தங்கி ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார். கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக போதையில் வந்த 3 பேர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து காரை தடுத்து கண்ணாடியை உடைத்து, அந்த ஆணை அரிவாளால் தாக்கி உள்ளனர். அவர் மயக்கமடைந்ததும், மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை விமான நிலைய பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியையும், தாங்க முடியாத துயரத்தையும் அளிக்கிறது. சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தொழில், வர்த்தக நகரான கோவையில் பெண்களுக்கு அதுவும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசிவிட்டு செல்வதும் நாகரிக சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய கொடூரம்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அடையாளமான சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டட விவகாரத்தில், யார் அந்த சார் என்பது இன்னமும் தெரியவில்லை. காவல்துறையும், திமுக அரசும் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதால்தான் இதுபோன்ற குற்றங்கள் தொடர்கின்றன.
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பதிலளிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டுமானால், அதுபோன்ற குற்றங்களில் காவல்துறையின் நடவடிக்கைகளும், தண்டனைகளும், குற்றவாளிகள் அச்சப்படும் அளவுக்கு இருக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டு காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக இருப்பதால் எந்த கொடூரத்தையும் செய்யத் துணியும் சூழல் தமிழ்நாட்டில் இருப்பதை கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், உடனே மரண தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்தான் காரணம். அதையும் கட்டுப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்!












Click it and Unblock the Notifications