ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு போன மனைவி மாயம்..கணவர் புகார்..போலீஸ் விசாரணை
கோவை: கோவை ஈசா யோகா மையத்தில் பயிற்சிக்காக வந்த மனைவியை காணவில்லை என்று ஆலந்துறை காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். மாயமானதாக கூறப்படும் அந்த பெண் காரில் இறங்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த பழனிகுமார் வயது 40 தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபஸ்ரீ வயது 34 திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தம்பதியினருக்கு 11 வயதில் மகள் உள்ளார்.

சுபஸ்ரீ கடந்த நான்கு வருடத்திற்கு முன்பாக ஈஷாயோகா மையத்துக்கு வந்து யோகா பயிற்சி பெற்றுள்ளார்.மீண்டும் யோகா பயிற்சியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் காலை ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார். பின்னர் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.
சுபஸ்ரீயை அழைத்துச் செல்ல அவருடைய கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளார். பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட தனது மனைவி வராததால் அதிர்ச்சியடைந்த கணவர் வரவேற்பு அறையில் உள்ளவரிடம் தனது மனைவி குறித்து கூறியுள்ளார்.
உடனடியாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் அவர் நேற்று காலை 9:30 மணிக்கு கால் டாக்ஸியின் மூலம் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி டிரைவரை விசாரணை செய்த போது அவர் சுப ஸ்ரீயை இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி வீடு திரும்பாததால் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பழனிகுமார் அளித்த புகாரில், எனது மனைவி சுபஸ்ரீ திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக எனது மனைவி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சைலன்ஸ் என்ற ஒரு வார யோகா பயிற்சியில் முதல் முறையாக கலந்து கொண்டார். அதேபோல் கடந்த 11 ஆம் தேதி மீண்டும் அதே வகுப்பில் கலந்து கொள்ள வேண்டி எனது மனைவியை காலை 6 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டு சென்றேன்.
அதன் பிறகு ஒரு வாரம் கழித்து கடந்த 18 ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு வகுப்பு முடிந்து மனைவியை கூட்டிச் செல்வதற்காக காலை 7 மணிக்கே ஈஷா யோகா மையத்தில் வந்து காத்திருந்தேன். ஆனால், 11 மணியைத் தாண்டியும் எனது மனைவி வெளியே வராததால் உள்ளே சென்று விசாரித்தேன். ஆனால், காலையிலேயே வகுப்பு முடிந்த பிறகு அனைவரும் சென்றுவிட்டனர் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக ஒரு டாக்சியில் ஏறிச் செல்வது தெரியவந்தது.

இந்த நிலையில், ஒரு நம்பரில் இருந்து எனது போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. பிறகு அந்த நம்பருக்கு திரும்ப அழைத்தேன். அதில் பேசிய நபர், ஒரு பெண் எனது கணவருக்கு பேச வேண்டும் என்று என்னுடைய போனை வாங்கி போன் செய்தார், ஆனால், அழைப்பை எடுக்காததால் செல்போனை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்தார். எனது மனைவி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். பழனிகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி சுபஸ்ரீயை தேடி வருகின்றனர்.

இதனிடையே வெள்ளை உடை அணிந்த பெண் காரில் இறங்கி வேகமாக ஓடுவது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சுபஸ்ரீ எதற்காக காரில் இருந்து இறங்கி ஓடினார் என்பது புரியாத புதிராக உள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆலந்தூர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications