விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு!
கோவை: தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூருக்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ள நிலையில், அவரைப் பார்க்க வந்த கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஐந்து சவரன் ஐந்து சவரன் தங்கச் செயின் திருட்டு போனது. செயினை பறிகொடுத்த அந்தப் பெண், வீட்டிற்கு தெரியாமல், குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல், விஜய்யைப் பார்க்கும் ஆர்வத்தில் வந்திருந்துள்ளார். அந்த நேரத்தில் 5 பவுன் தங்கச் செயின் திருடு போனதால் செய்வதறியாமல் திகைத்தார்.
சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். முன்னதாக, தனி விமானம் மூலம் கோவை வந்த விஜய், சாலை மார்க்கமாக திருப்பூர் புறப்பட்டார்.

கோவை விமான நிலையத்துக்கு வந்த விஜய்க்கு ஏராளமான மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, விஜய்யின் வாகனம் கணியூர் சுங்கச் சாவடி அருகே வந்தபோது, அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய்யை வரவேற்க சூலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சுகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிய வேட்பாளர் சுகுமார் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவருக்கு அருகில் இருந்த ஆம்புலன்ஸில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சூலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த கூட்ட நெரிசலில், அப்பகுதியில் இருந்த கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஐந்து சவரன் ஐந்து சவரன் தங்கச் செயின் திருட்டு போனது. நகை திருட்டு போனது குறித்து அந்தப் பெண் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் அவர் தெரிவித்தார். அங்கிருந்த காவலர்கள் அவரை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் நேரடியாகச் சென்று புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
செயினை பறிகொடுத்த அந்தப் பெண், வீட்டிற்கு தெரியாமல், குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல், விஜய்யைப் பார்க்கும் ஆர்வத்தில் வந்திருந்துள்ளார். அந்த நேரத்தில் 5 பவுன் தங்கச் செயின் திருடு போனதால் செய்வதறியாமல் திகைத்தார். வீட்டில் என்ன சொல்லுவேன் என அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
கொளுத்தும் வெயிலில் விஜய்யைப் பார்க்க ஏராளமான மக்கள் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இன்று காலை முதல் காத்திருக்கின்றனர். அப்பகுதியில் கடும் வெயில் காரணமாக 10 பேர் வரை மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
சரியான இடத்தில் சரியான அமைச்சர்.. இரவிலும் கடமை தவறாத வன்னியரசு.. குவியும் பாராட்டு -
அமைச்சரை தெரியும்னு யாராவது வந்தால் வெளிய துரத்துங்க.. ஜூலை 1 முதல் மாற்றம்.. ராஜ்மோகன் அதிரடி -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்












Click it and Unblock the Notifications