கொரோனா தளர்வுகள் : திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் உற்சாகமாக புனித நீராடி சாமி தரிசனம் செய்த மக்கள்
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடலுக்கு வந்த பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நான்கு மாதங்களுக்கு பிறகு கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலிலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.
Recommended Video
கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு கேளிக்கைப் பூங்காக்கள், திரையரங்குகள், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்ல ஏப்ரல் 20 முதல் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்ததில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆனது கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கடலில் புனித நீராட அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர். கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்தது. இதில் கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ரமேஸ்வரம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் தீர்த்தக்கிணறுகளில் புனித நீராடுவதற்கு தடை நீடிக்கிறது. இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் குவிந்த மக்கள்
கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகள் படி இன்று தமிழகத்தில் சுற்றுலா மையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர் சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரி களைகட்டியது,
கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டிருந்தன. தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகள் படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் சுற்றுலா மையங்கள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் முன்கூட்டியே நேற்று மாலையே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கேரளாவில் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை முடிந்ததாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் நேற்று மாலை முதல் கன்னியாகுமரிக்கு வருகை தர தொடங்கினார்கள். இன்று காலையிலும் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், பீச் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குடும்பத்துடன் வருகை தந்து உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர். இரண்டு மாதமாக காலமாக வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications