Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டிக்கிட்டீங்களே ஏட்டையா! அதிமுக கூட்டத்துக்கு கரண்ட் ஆட்டைய போட்ட ர.ர.க்கள்! போட்டோவால் சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம் : விருத்தாச்சலம் அருகே நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என அதிமுக தலைமை, மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக அமைப்பு மாவட்டங்களில் வசதிக்கேற்றார் போல் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை பிரம்மாண்டமாகவும் சிலர் எளிமையாகவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுக்கூட்டம்

அதிமுக பொதுக்கூட்டம்

இந்நிலையில் தான் விருத்தாச்சலம் அருகே நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விருத்தாச்சலம் அருகே மங்கலம்பேட்டையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் தலைமையில் நடந்தது.

மின் திருட்டு

மின் திருட்டு

இந்த நிகழ்ச்சிக்காக பொதுக்கூட்ட மேடை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில், மேடை மட்டுமல்லாது அப்பகுதி முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் பகல் போல காட்சியளித்தது. இந்நிலையில் தான் அங்கு மின்சாரம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கூட்ட நடத்திவதற்காக நூற்றுக்கணக்கான ட்யூட் லைட்டுகள், போக்கஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில்,அதற்கு தேவைப்படும் மின்சாரத்தை திருடப்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

போட்டோக்கள் பரவல்

போட்டோக்கள் பரவல்

கூட்டம் நடந்த தெருவில் இருந்த மின்கம்பத்தின் ஒரு பதியில் இருந்து திருட்டுத்தனமாக நிகழ்ச்சிக்கு ஒளி ஒலி ஏற்பாடு செய்திருந்த நபர்கள் வயர் மூலம் எடுத்து பயன்படுத்தியதாக தற்போது புகைப்படமும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே பல நிர்வாகிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் இந்த தகவல் கிடைத்த நிலையில், ஒலி அமைப்பாளரை அழைத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது,

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

ஆனாலும் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டது மட்டும் நிறுத்தப்படவில்லை. இதனையடுத்து அப்பகுதி திமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு கமெண்ட் செய்த அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு திருட்டு மின்சாரம் பயன்படுத்திய அதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+