சேர்ந்து வாழ சம்மதிக்காத காதலன்.. குடும்பதுடன் போன வீட்டுக்கு போன காதலி.. கதறல்

Subscribe to Oneindia Tamil

கடலூர் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே காதல் கணவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என காதலன் வீட்டின் முன்பு காதலி பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பெண்ணின் தாய் கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணான ராஜகுமாரி என்பவர் தனது தாய் தந்தையுடன் வீராணநல்லூர் கிராமத்தில் தனது காதலன் வீட்டின் முன்பு நின்று கொண்டு காதல் கணவனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என தர்ணா போராட்டம் செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி ராஜகுமாரி கூறியதாவது நான் முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடந்த 2014ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்சிஏ படிக்கும்போது காட்டுமன்னார்கோவில் தாலுக்கா வீராணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் கார்த்திக் என்பவர் பி.இ படிக்கும் போது இருவருக்குமிடயே காதல் மலர்ந்தது.

தாலி கட்டினார்

தாலி கட்டினார்

கடந்த 2018ஆம் ஆண்டு அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் ஒரு கோவிலில் வைத்து கார்த்திக் தாலி கட்டினார். இருவர் வீட்டிற்கும் தெரியாமல் தாலி கட்டியவுடன் நான் என் வீட்டிற்கும் அவர் அவர்கள் வீட்டிற்கும் சென்று விட்டார். அதன் பிறகு கார்த்திக் சென்னைக்கு வேலைக்கு சென்றார். நானும் சென்னைக்கு சென்று அவருடன் சில தினங்கள் அங்கேயே தங்கி குடும்ப நடத்தினோம்.

வரவில்லை

வரவில்லை

அதன் பிறகு என்னை உங்கள் வீட்டிற்கு செல் எனது பெற்றோர் சம்மதம் பெற்று உன்னை எனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினார். ஆனால் நானும் நீண்ட நாட்களாக காத்திருந்தேன் வரவில்லை. அதன்பிறகு சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு புகார் கொடுத்தேன் இரு தரப்பினரையும் விசாரித்தனர். இதில் இரு குடும்பத்தாரிடம் போலிசார் பேசியதில் அவர்கள் வீட்டில் விரைவில் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறேன் என அவர்கள் குடும்பத்தினர் பேசி முடித்தனர்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

ஆனால் அதன் பிறகு என்னை குடும்பம் நடத்த அழைத்து செல்லவில்லை. எங்கள் கிராமத்தில் குடும்பத்தினரை கிராமத்தில் இழிவாக பார்க்கின்றனர். இதனால் மனம் உடைந்த நான் மீண்டும் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையம் சென்றேன். அங்கு காவல் ஆய்வாளர் மீனா, கார்த்திக் உன்னோடு வாழ சம்மதிக்காத காரணத்தினால் நீ நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நிவாரணம் தேடிக் கொள் எங்களால் எதுவும் செய்ய முடியாது என பஞ்சாயத்துப் பேசி அனுப்பி விட்டனர்.

தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம்

இதனால் மனமுடைந்த நான் இன்று காலை எனது தாயுடன் மற்றும் ஒரு கண் தெரியாத தந்தையுடன் அவர்கள் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் செய்கிறேன் ஆனால் அவரது உறவினர்கள் மற்றும் கார்த்திக் தாய் தந்தையர் வீட்டிற்குள் என்னை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+