• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நைஸா தீபா வீட்டில் நுழைந்த 'நாகராஜ்'.. டக்கென கண்விழித்த கணவர்.. அதுவும் கோழிகூண்டிற்குள்.. ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

கடலூர்: நள்ளிரவு நேரத்தில், தீபா வீட்டிற்குள் நுழைந்த நாகராஜனால், கடலூரே கதிகலங்கிவிட்டது.. என்ன நடந்தது?

கடலூரில் 3 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.. கம்மியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி இளமாறன்.. அவரது வீட்டு கிச்சனில் பாத்திரங்களை அடுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து, வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டுள்ளது...

அது பாம்பு சத்தமாக இருக்கலாம் என்று சந்தேகித்த குடும்பத்தினர் பாம்பு பிடிக்கும் வீரரான செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

பாம்பு படகுப்போட்டியில் ராகுல் காந்தி.. துடுப்புகளை வீசி அசத்தல்.. கேரளாவில் உற்சாகம்! பாம்பு படகுப்போட்டியில் ராகுல் காந்தி.. துடுப்புகளை வீசி அசத்தல்.. கேரளாவில் உற்சாகம்!

 குக்கரில் தலை

குக்கரில் தலை

செல்லாவும் கிச்சனுக்கு சென்று வினோதமான சத்தம் வந்த இடத்தை ஆராய்ந்தார்.. பாத்திரங்களுக்கு நடுவில் இருந்து சத்தம் கேட்டாலும், எங்கிருந்து சத்தம் வருகிறது என்பதை உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்த்தார் செல்லா.. அப்போது அங்கிருந்த பெரிய குக்கரையும் எட்டிப் பார்த்தார்.. திடீரென ஒரு நல்ல பாம்பு தலையை தூக்கி காட்டியது... அந்த பாம்பு 4 அடி நீளம் கொண்டதாக இருந்தது.. ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த நல்ல பாம்பை பிடிக்க படாதபாடு பட்டார் செல்லா..

சகஜம்

சகஜம்

இறுதியில் அதை பிடித்து பாதுகாப்பாக காப்புக் காட்டிலும் கொண்டு போய் விட்டார்... பாம்பு வீட்டுக்குள் நுழைவதும், பிடிப்பதும் சகஜம்தான் என்றாலும், எப்போது வந்து குக்கருக்குள் பாம்பு வந்திருக்கும்? அதுவும் மூடிய குக்கருக்குள் எப்படி அந்த பாம்பு போயிருக்கும் என்றுதான் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.. இதே கடலூரில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. இது சற்று வித்தியாசமான சம்பவமாக உள்ளது.

 கோழி விநோத சத்தம்

கோழி விநோத சத்தம்

திருவனந்தபுரத்தில் கதிர் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. மனைவி பெயர் தீபா.. இவர்கள் நிறைய கோழிகளை வளர்க்கிறார்கள்.. இந்நிலையில் நேற்றிரவு தம்பதி தூங்க சென்றுவிட்டனர்.. சிறிது நேரம் கழித்து, திடீரென ஒரு கோழி கத்த ஆரம்பித்துவிட்டது.. இந்த அளவுக்கு இதற்கு முன்பு கோழி சத்தம் போட்டதில்லை என்பதுடன், அந்த சத்தம் வித்தியாசமாகவும் வந்துள்ளது.. இதனால், தீபாவும், கதிரும் எழுந்துவந்து கோழிக்கூண்டை பார்த்தனர்..

 கோழிக்கூண்டு

கோழிக்கூண்டு

அப்போது, நாகப்பாம்பு, ஒரு கோழியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போயினர்.. பிறகு உடனடியாக பாம்பு பிடிவீரருக்கு தகவல் தந்தனர். அதே செல்லாதான் இங்கேயும் என்ட்ரி தந்தார்.. ஆனால் செல்லா இங்கு வந்து சேர்வதற்குள் பாம்பு கடித்து, அந்த கோழி இறந்துவிட்டது.. ஆனாலும், கூண்டை விட்டு வெளியே வராமல் பாம்பு அங்கேயே தங்கிவிட்டது.. அதனால், கூண்டில் இருந்த பாம்பை பிடிக்க, செல்லா முயற்சித்தார்.. அப்போது திடீரென தீபா அலறினார்..

 நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகா

சந்திரமுகி படத்தில், ஜோதிகா ஒருசெகண்ட் சந்திரமுகியாய் மாறுவாரே, அதுபோல நாகினியாக மாறினார் தீபா.. சுழன்று சுழன்று சாமியாடினார்.. என்னென்னமோ பேச ஆரம்பித்தார்.. இந்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்துவிட்டனர்.. தீபாவை பார்த்ததுமே மிரண்டு போய், அவரது காலில் அவர்கள் விழுந்து வணங்க ஆரம்பித்தனர்.. "ஆமா, என்னை கும்பிட்டாயா?" என்று உக்கிரமாக கேட்டு, தீபாவும் அவர்களுக்கு அருள்வாக்கு சொல்ல துவங்கினார்..

 பாம்பு புற்று

பாம்பு புற்று

இதற்கு பிறகு, தீபாவை ஆசுவாசப்படுத்தி, இயல்பு நிலைமைக்கு அங்கிருந்தோர் கொண்டு வந்தனர்.. இதையெல்லாம் பார்த்து, பாம்பு பிடிக்க வந்த செல்லாவே விக்கித்து நின்றுவிட்டார்.. தீபா நார்மல் மோடுக்கு வந்தபிறகு, கூண்டுக்குள் இருந்த பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு, பாட்டிலில் அடைத்து, பத்திரமாக கொண்டு போய் காப்புக் காட்டில் விட்டுவிட்டார்.. தீபா எப்போதுமே பாம்பை வணங்குவாராம்.. வார வாரம் வெள்ளிக்கிழமை புற்றுக்கு பால் ஊற்றிவிட்டு வருவாராம்.. அதனால்தான் நாகம்மாவே வீடு தேடி வந்ததாகவும், நாகினி அவதாரத்தையே தீபா எடுத்துவிட்டதாகவும் அந்த பகுதி மக்கள் புல்லரித்து போய் சொல்கிறார்களாம்..!

English summary
excitement of the snake lying in the Chicken cage and what happened in Cuddalore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X