படிச்சி பெரிய ஆளா வருவேனு நினைச்சேனே.. மாணவியின் உடலை பெற்ற தாய் கதறல்.. பெரும் சோகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவியின் உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வேளையில், ‛‛படிச்சி பெரிய ஆளா வருவேனு நினைச்சேனே.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டேனே'' எனக்கூறி அவரது தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Recommended Video
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்தார்.
கடந்த 13ம் தேதி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கூறினார்.

மறு பிரேத பரிசோதனை
மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டம் நடைபெற்றது. கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையானது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரதே பரிசோதனை முடிவடைந்த பிறகும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்ததோடு சட்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாணவியின் உடல் மறுபிரதேச பிரசோதனை செய்யப்பட்டது.

பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று காலை 6.55 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்று கொண்டனர். கதறி அழுது கண்ணீருடன் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவியின் உடல் இறுதி சடங்குக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனையில் இருந்து சொந்தஊரான பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் செல்கின்றனர்.

கதறிய தாய்
முன்னதாக மாணவியின் உடலை வாங்கி கொள்ள அவரது தாய் செல்வி மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதார். அப்போது அவர், ‛‛இனி உன்ன எப்போமா பார்ப்பேன்.. உன்னை கண்ணும், கருத்துமா வளர்த்தேனே... படிச்சி பெரிய ஆளா வருவேனு நினைச்சி வளர்த்தேனே.. உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டேனே.. என் தங்கமே.. எப்படி எங்களை விட்டு பிரிஞ்சி போன.. தயவுசெய்து என் மகளை நல்ல முறையில் அடக்கம் பண்ண விடுங்க.. என் மகள என்னால மறக்க முடியல.. நல்ல மார்க் எடுத்து வந்திருந்தா நான் சந்தேப்பட்டு இருப்பேனே.. இப்போது என்னால ஜீரணிக்கவே முடியலேயே'' என கதறி அழுதது அனைவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

கண்காணிப்பு தீவிரம்
இதற்கிடையே பெரியநெசலூர் கிராமத்துக்கு புறப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர் நுழைவு பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாணவியின் இறுதிசடங்கில் வெளியூர் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்கு மாலையில் இறுதி சடங்குகளை நிறைவேற்ற கூறியுள்ளதால் பெரியநெசலூர் கிராமத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications