கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்க கொண்டு விட்டுருக்க பார்த்தியா..கடலூரில் கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு ஏற்பட்ட கதியை பாருங்க

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூரில் கூகுள் மேப்பை பார்த்து ஓட்டி வந்த லாரி டிரைவர் தவறுதலாக ஒருவழிப்பாதைக்குள் வந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கடலூர் பேருந்து நிலையத்திற்குள் லாரியை கொண்டு சென்ற ஓட்டுநர் சரியான பாதையில் திரும்பிச்சென்றார்.

முன்பெல்லாம் வழி தெரியாத ஊருக்கு போவதென்றால் அவ்வழியாக வருபவர்களிடம் கேட்டு கேட்டு செல்ல வேண்டியிருக்கும்.

ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் பயணம் செய்வதென்றால் சரியான வழியை கண்டுபிடித்து போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், இப்போதெல்லாம் இந்த அளவுக்கு சிரமப்பட வேண்டியது இல்லை.

கடலூர், பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கடலூர், பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

கூகுள் மேப்

கூகுள் மேப்

கூகுள் மேப்ஸ்சில் நாம் செல்ல வேண்டிய இடத்தை பதிவிட்டால் போதும்.. ஒரு நொடிக்குள் நாம் எப்படி போக வேண்டும்...போய் சேருவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்...போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதா? என்பது வரை நம் உள்ளங்கைக்குள் தகவலை கொண்டு வந்து விடும். இதனால், எந்த சிரமும் இன்றி எளிதாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடிகிறது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கு கூட சரியாக ரூட்டை போட்டு கூகுள் மேப்ஸ் காட்டி விடும்.

பராமரிப்பின்றி மூடி கிடந்தாலும்

பராமரிப்பின்றி மூடி கிடந்தாலும்

தொலைதூரங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், சரக்கு லாரி வாகன ஓட்டிகள் என பலருக்கும் முன்பை ஒப்பிடும் போது இப்போது வழி தேடி அலையும் கஷ்டம் பெரிதாக இல்லை. ஆனாலும் சில நேரங்களில் இந்த கூகுள் மேப்ஸ்கள் தவறான பாதையை காட்டி விடுவதாகவும் சாலைகள் பராமரிப்பின்றி மூடி கிடந்தாலும் அந்த வழியாகவும் அனுப்பி வைத்து விடுவதாகவும் அவ்வப்போது சில விமர்சனங்களும் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

செல்லும் வழியில் குழப்பம்

செல்லும் வழியில் குழப்பம்

கடலூரில் கூகுள் மேப்ஸ் பார்த்து ஓட்டியதால் தவறான பாதைக்கு சென்று விட்டதாக லாரி ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:- ஈரோடு மாவடம் சங்கரி பகுதியை சேர்ந்தவர் முருகன். டிரைவரான இவர் அங்குள்ள சிப்காட்டில் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக பெங்களூருவுக்கு ரசாயன மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியில் புறப்பட்டு இருக்கிறார். செல்லும் வழியில் சற்று குழப்பம் ஏற்பட்டதால் கூகுள் மேப்சில் வழியை தேடியிருக்கிறார்.

 இங்கு ஏன் வந்தீர்கள்...

இங்கு ஏன் வந்தீர்கள்...

அதில் காட்டிய வழியில் முருகன் லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது முதுநகர், இம்பீரியல் சாலை வழியாக லாரியில் வந்த முருகன், ஒருவழிப்பாதையான லாரன்ஸ் சாலைக்கு வந்துவிட்டார். அங்கு ரயில்வே சுரங்கப்பாதை இருந்ததால், இதற்கு மேல் செல்ல முடியாது என்று திகைத்து வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டார். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்களும், இங்கு கனரக வாகனங்கள் செல்ல முடியாது. இங்கு ஏன் வந்தீர்கள்... அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் சென்று திரும்பி சென்று விடுங்கள் என அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இப்படி சுற்ற வைத்து விட்டதே

இப்படி சுற்ற வைத்து விட்டதே

இதன்படி, முருகனும் லாரியை பேருந்து நிலையத்திற்குள் எடுத்துச்சென்றார். திடீரென பேருந்து நிலையத்தில் லாரி வருகிறதே என்று அங்கிருந்த பயணிகளும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பேருந்து நிலையத்தில் லாரிய திருப்பி மீண்டும் சாரியான ரூட்டை பிடித்து சென்று விட்டார். கூகுள் மேப்சை நம்பி வந்ததற்கு இப்படி சுற்ற வைத்து விட்டதே என்று லாரி ஒட்டுநர் முருகன் புலம்பாத குறைதான்.

English summary
There was a traffic jam in Cuddalore when a lorry driver, who was driving by looking at Google Maps, entered the one-way road by mistake. Subsequently, the driver who took the lorry into the Cuddalore bus station returned to the correct route.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X