ஷ்ஷ்ஷ்.. ஷூவில் இருந்து வந்த சத்தம்! உள்ளே பார்த்தால்.. காத்திருந்த ஷாக்! பெற்றோர்களே உஷார்!
கடலூர் : கடலூரில் பள்ளி மாணவர்கள் அணிந்து செல்லும் ஷூவில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அவ்வீட்டினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், பாம்பு மீட்கப்பட்டு பத்திரமாக வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது.
கடலூர் செம்மண்டலம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சார்ந்தவர் அசோகன். இவரது வீட்டில் இன்று பள்ளி மாணவர்கள் அணிந்து செல்லும் ஷூ வில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அவ்வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து கடலூரில் பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் அங்கு சென்ற பாம்பு பிடி வீரர் செல்லா, ஷூவில் இருந்த நல்ல பாம்பு குட்டியை பத்திரமாக பிடித்து காப்பு காட்டிற்குள் விட கொண்டு சென்றார்.

ஷூவுக்குள் பாம்பு
தற்போது பள்ளிகள் விடுமுறை இருக்கும் நேரத்தில் மாணவர்கள் ஷூவினை வெளியில் விட்டு பள்ளிகள் திறக்கும் நேரத்தில் அதனை அணிந்து செல்லும் பொழுது கவனமாக பார்த்து செல்ல வேண்டுமென அவர் அறிவுரை வழங்கி சென்றார். இதனிடையே மழைக்காலம் தொடங்கியதால் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்கத்தொடங்கியுள்ளன. கடலூர் மட்டுமல்ல பொதுவாக எல்லா இடங்களிலுமே இச்சிக்கல் இருக்கத்தான் செய்யும்.

உயிரிழப்பு அதிகரிப்பு
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் மழை பெய்கிவதனால், அருகில் உள்ள முட் புதர்கள், வயல் வெளிகள், வனப்பகுதியில் இருந்து பாம்புகள், குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவு வருகின்றன. அச்சமடையும் மக்கள், ஆட்களை அழைத்து அந்த பாம்புகளை அடித்துக் கொல்லுகின்றனர். மிக சிலரே அடிக்காமல் அதை விரட்டிவிடுகின்றனர். தெரியாமல் மிதித்துவிடுவதால் பாம்புகள் கடிப்பதால் உயிரிழப்பும் தமிழகத்தில் அதிகமாகி வருகிறது.

பெற்றோர்கள் கவனம்
மனிதர்கள் வாழும் வீட்டின் கத கதப்பான சூழல் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்களை ஈர்க்கிறது. மழைக் காலத்தில் தவளை, தேரை போன்ற உயிரினங்களை சாப்பிட பாம்புகள் நடமாட்டம் அதிகரிக்கிறது. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்கக் காலம் என்பதாலும் அவை வெளியே நடமாடத் தொடங்குகின்றன. எல்லா பாம்பும் நஞ்சுள்ள பாம்புகள் அல்ல. நல்லபாம்பு, கட்டுவிரியன், விரியன், சுறுட்டைவிரியன் ஆகிய நான்கு பாம்புகள் மட்டுமே அதிக மனித உயிர் இழப்புக்குக் காரணமாகிறது.

என்ன செய்ய வேண்டும்?
இவற்றிடம் சற்று எச்சரிக்கையாக இருந்தால்போதும். பாம்பு கடித்தவுடன் பதட்டப்படாமல், அழுகை, கத்துதல், ஓட்டம், ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவிக்கு ஒரு நபரையோ அல்லது 108 அவசர ஊர்தி அல்லது இருக்கும் வாகனத்தில் அரசு மருத்துவமன செல்ல வேண்டும். காலணிகளை பொதுவாக ஷு தரையில் வைக்காமல், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். நன்கு சோதித்த பின்பு அணிய வேண்டும் என பாம்பு பிடி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications