அமைச்சர் மெய்யநாதனுக்கு என்னாச்சு? டாக்டர் குழுவுடன் சென்னைக்கு பறந்த கார்.. மருத்துவமனையில் அனுமதி!
கடலூர் : சென்னைக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரத்தில் இறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதனின் உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளதால் அவர் தனி கார் மூலம் மருத்துவக் குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கிப் பயணம் செய்தார்.
ரயில் பயணத்தின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுக்கோட்டையில்
தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நாகப்பட்டினத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கௌதமனை வரவேற்கும் நிகழ்ச்சி, பேட்மிண்டன் அகாடமி திடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் நேற்று பங்கேற்றார்.

ரயிலில் பயணித்த அமைச்சர்
பின்னர், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக பயணம் செய்தார். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஏறி சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

2 மணிக்கு திடீர் உடல்நலக்குறைவு
இதையடுத்து, நள்ளிரவு 2 மணி அளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் மெய்யநாதன் அங்கு சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

முன்னேற்றம்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்னர் அவர் உடல்நிலை சீரடைந்து நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தன. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்த அமைச்சரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

சென்னை விரைந்த அமைச்சர்
இந்நிலையில், கடலூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் மெய்யநாதன் தனி கார் மூலம் மருத்துவக் குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு, ஓய்வெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications