கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரத்தில் திடீர் திருப்பம்! அதிர வைக்கும் புதிய சிசிடிவி காட்சிகள்

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், இப்போது திடீர் திருப்பமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்குப் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார்.

பள்ளி நிர்வாகம் அந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறது. ஆனால், மாணவியின் பெற்றோர்கள் இதை ஏற்க மறுத்து வருகின்றனர்.

விடிஞ்சா கல்யாணம்.. விபத்தில் சிக்கி உயிரிழந்த மணமகன்! ஆனாலும் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 'இராஜ்’ விடிஞ்சா கல்யாணம்.. விபத்தில் சிக்கி உயிரிழந்த மணமகன்! ஆனாலும் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 'இராஜ்’

 மரணம்

மரணம்

மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதைக் கண்டறிய வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர். முன்னதாக கடந்த ஜூலை 17இல் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டம் எதிர்பார்க்காத வகையில் வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்தில் இருந்து பள்ளி மேஜைகள், பேருந்துகள் உள்ளிட்டவற்றைக் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

 போராட்டம்

போராட்டம்

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. போராட்டம் நடந்த போது வன்முறையில் ஈடுபட்டது யார் என்பது அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். மேலும், பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 ஜாமீன்

ஜாமீன்

அதைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, மற்றும் மூன்று ஆசிரியர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். அவர்கள் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த ஐகோர்ட் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கினர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் நடந்துள்ளது.

 புதிய சிசிடிவி

புதிய சிசிடிவி

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மாணவியின் உடல் கடந்த 13ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே மாணவியின் தாயாருடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரம் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் இரவு 7 மணி அளவில் மாணவியின் தாயார் உடன் பள்ளி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 மாணவியின் தாயார்

மாணவியின் தாயார்

அதில் உயிரிழந்த மாணவி தரப்பில் அவரது தாயார் உள்ளிட்ட ஒன்பது பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். மாணவி உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்துப் பேசவில்லை என்று மாணவியின் தாயார் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இந்தச் சூழலில் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதும் அதில் மாணவியின் தாயாரே பங்கேற்றதற்கான ஆதாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 எங்கே

எங்கே

சக்தி மெட்ரிக் பள்ளியில் இருக்கும் ஆடிட்டோரியத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு பக்கம் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் உறவினர்கள் உட்பட 4 பேர் இருந்துள்ளனர். மறுபுறம் மாணவி தரப்பில் அவரது தாயார் உள்ளிட்ட ஒன்பது பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். இந்த வீடியோ முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

English summary
Kallakurichi school student New CCTV footage: Kallakurichi school had meeting with deceased students parents
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X