பூமிகா எனக்கு தான்! கணவனை இழந்த பெண்ணால் சுடுகாட்டில் கலவரம்! அடங்கிப் போன உயிர்! கதிகலங்கிய கடலூர்!
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கணவனை இழந்த பெண்ணுக்காக ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில், நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.

கடலூரில் கொலை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக நண்பர்கள் சுமன் மற்றும் அவரது நண்பரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் படி, ஆட்டோ டிரைவர் சக்திவேலுக்கும் அவரது நண்பர் சுமனுக்கும் கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் சக்திவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சக்திவேலின் உறவினர்கள் பண்ருட்டி சேலம் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்த பிறகு உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இந்த வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

கள்ளக் காதல் விவகாரம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சுமன், இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். அதே பகுதி சேர்ந்த பூமிகா திருமணம் ஆகி கணவர் இறந்த நிலையில் தாய் வீட்டில் வசித்து வருகிறார் பூமிகாவும் சுமனும் தொடர்பில் இருந்த நிலையில் தற்பொழுது பூமிகா சக்திவேலுடன் பழக்கம் ஏற்பட்டதால் சக்திவேலுக்கும் சுமனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.

சமாதானம்
இதையடுத்து, நேற்று இரவு சமாதானம் பேசுவதாக கூறி சக்திவேலை அழைத்து சென்றுள்ளார் சுமன் பேச்சை நம்பி சக்திவேல் சென்றார். தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது பூமிகா விவகாரத்தில் தலையிடகூடாது" என்று சுமன் கூறியதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது சுமனும் அவனது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.

போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்ததும் டிஎஸ்பி சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான வாலிபர் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சுமன் நண்பன்கள் இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதற்கு காரணமான கள்ள காதலி பூமிகாவை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications