ராணுவத்தையே கூட்டி வந்தாலும் பூட்டு.. எல்லா கேட்டையும் பூட்டிடுவோம் பாத்துக்கோங்க! ஆவேசமான அன்புமணி!
கடலூர் : கடலூரில் என்.எல்.சி.க்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரிய பூட்டு ஒன்றை காட்டி பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்," இது எச்சரிக்கை பூட்டு தான்.. அடுத்து உண்மையான பூட்டை எடுத்து வந்து எல்லா கேட்டையும் பூட்டி விட்டுடுவோம் பாத்துக்கோங்க என எச்சரிக்கை விடுத்தார்.
கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.
இதனையடுத்து இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முக்கிய நிர்வாகிகள், பாமக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்வேலு என்.எல்.சி
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி முழக்கங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்," 64 ஆண்டுகளுக்கு மேலாக என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட மண்ணையும் மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து வருகிறது. ஒரு காலத்தில் தன்னூத்தாக இருந்த கடலூர் மாவட்டத்தின் நீர்மட்டம் 8000 அடிக்கும் கீழே சென்று விட்டது.

என்எல்சி நிறுவனம்
என்எல்சி நிறுவனம் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சியதால் தற்போது கடலூர் மாவட்டத்தையே பாலைவனமாக மாற்றி விட்டது. இதற்கு முழு காரணமும் என்எல்சி தான். நிலம் கொடுத்த மக்களுக்கு என்எல்சி நிறுவனம் வேலை வழங்கவில்லை. இதனால் அவரது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை.

பூட்டு போடுவோம்
இதுவரை நான் எந்த நிறுவனத்தையும் மூட வேண்டும் என்று சொல்லியதே இல்லை. ஆனால் என்எல்சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ராணுவத்தையே கூட்டி வந்தாலும் என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம் நிலம் எடுக்க வந்தால் முடியாது என கூறுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு படி மண்ணைக் கூட எடுக்க முடியாது என பேசினார்.

எச்சரிக்கை
அப்போது மாதிரி பூட்டு ஒன்றை பாமக தொண்டர்கள் கூட்டத்தின் இடையே எடுத்து வந்தனர் அதனை பார்த்த அன்புமணி ராமதாஸ் இது எச்சரிக்கை போட்டு தான் அடுத்து உண்மையான பூட்டை எடுத்து வந்து எல்லா கேட்டையும் பூட்டி விடுவோம் பார்த்துக்கோங்க என எச்சரிக்கை விடுத்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications