மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்
டெல்லி ;மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் அமல்படுத்தக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது,

அப்போது மத்திய அரசு தீர்ப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் மருத்துவ படிப்பில் அகில இந்திய கோட்டாவில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதவில்லை எனக்கூறி மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தி.மு.க தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம். எவ்வாறு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு வழங்கக்கூடாது என கூற முடியும் என கேள்வி எழுப்பினார்
அப்போது நீதிபதிகள் மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு உச்சநீதிமன்றம் அனுமதி பெற வேண்டும் என்றே சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவிர்தனர்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு உச்சநீதிமன்றம் அனுமதி பெற வேண்டும் என்றே சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் 10% தடைவிதிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை அந்த நீதிமன்றம் முன்பு வைக்கப்படவில்லை.
அவ்வாறு இருக்கையில் உயர்நீதிமன்றம் தன் வரம்புக்கு மீறி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதே தனது கோரிக்கை.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு சம்பந்தம் இல்லாதது என தெரிவித்தார். அப்போது தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இதுவரை அனுமதி வழங்கவில்லையே, அப்படி இருக்கும்போது உயர்நீதிமன்றங்கள், இந்த விவகார்ர்தில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெற்றே அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவிக்கலாம், அதில் தவறில்லையே என வாதிட்டார்.
ஆனால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் 10% இடஒதுக்கீடு அமல்படுத்துவது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு என்பது அந்த நீதிமன்றம் முன்பு என்ன கோரிக்கை வைக்கப்பட்டதோ அதற்கு முரணாக உள்ளது. ஏனெனில் மருத்துவபடிப்பில் அகில இந்திய கோட்டாவில் 27% ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்று அவமதிப்பு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கில் எவ்வாறு பொருளாதாரத்தில் பின்தங்கிய 10% குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியும் ? என கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தனது விசாரணை வரம்பை மீறியுள்ளதாகவே பார்க்க முடிகிறது என கருத்து தெரிவித்தனர். இதனைதொடர்ந்து, நீதிபதிகள், மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு உச்சநீதிமன்றம் அனுமதி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உத்தரவை ரத்து செய்வது தொடர்பாக விளக்கமளித்த நீதிபதிகள், 27% ஓ.பி.சி இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்பில் அமல்படுத்தாத மத்திய அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மனுதாரரான தி.மு.க.வின் கோரிக்கை, ஆனால் அந்த கோரிக்கையை தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடுண தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, எனவே இது ஏற்புடையதல்ல, என்பதால் அந்த குறிப்பிட்ட சரத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.
முன்னதாக, மருத்துவ படிப்பில் 27% ஓ.பி.சி இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு செய்து அதை அமல்படுத்த கடந்த ஜூலை 29ம் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால் ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு அந்த வழக்கை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது












Click it and Unblock the Notifications