டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நள்ளிரவில் பரபரப்பு! ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படை விமானம்! இரு விமானிகள் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தானில் இந்தியா விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ராஜஸ்தானில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானிகள் இருவர் நேற்று வழக்கம் போல மிக்-21 ஜெட் விமானத்தில் பயிற்சி கொண்டு இருந்தனர். ராஜஸ்தானில் அவர்கள் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.

ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதிக்கு விமானம் சென்றபோது, அது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி உள்ளது.

அடுத்த 8 வாரங்கள்.. 50% மட்டுமே விமான சேவை.. தீவிர கண்காணிப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்! அடுத்த 8 வாரங்கள்.. 50% மட்டுமே விமான சேவை.. தீவிர கண்காணிப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

 பயிற்சி விமானம் விபத்து

பயிற்சி விமானம் விபத்து

இந்தத் தகவலை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. நேற்று இரவு ராஜஸ்தானின் பார்மரில் பயிற்சியின் போது விமானப்படையின் மிக்-21 ஜெட் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்து உள்ளனர். இது தொடர்பாக இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமானப்படையின் மிக்-21 பயிற்சி விமானம் இன்று மாலை ராஜஸ்தானில் உள்ள உதர்லாய் விமான தளத்திலிருந்து பயிற்சிக்காகப் புறப்பட்டது.

 இருவர் பலி

இருவர் பலி


அந்த விமானம் இரவு 9:10 மணியளவில் பார்மர் அருகே விமானம் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இரு விமானிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த விமானிகளுக்கு விமானப் படை ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. மேலும், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக விமானப்படை நிற்கும்" என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

 ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்


மிக்-21 விமான விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌதரியிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். விபத்தில் உயிரிழந்தோருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மிக்-21 என்பது சோவியத் காலத்து ஒற்றை இன்ஜின் போர் விமானம் ஆகும். இத்தனை ஆண்டுகளாக இது நமது விமானப்படையின் முதுகெலும்பாக இருந்தது.

 மிக்-21 விமானம்

மிக்-21 விமானம்

இருப்பினும், மிக்-21இல் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என்ற விமர்சனம் தொடரவே செய்கிறது. கடந்த காலங்களில் மிக்-21 விமானம் பல்வேறு விபத்துகளில் சிக்கி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த விமானம் சேவையில் இருந்து விலகிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

English summary
Two pilots were killed Air Force's MiG-21 jet crash: (விமானப்படை மிக்-21 விமானம் ராஜஸ்தானில் விபத்து) Rajasthan's Barmer MiG-21 jet accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X