டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்சிஜன் தட்டுப்பாடு: டெல்லி மருத்துவமனையில் 25 நோயாளிகள் உயிரிழப்பு.. 60 பேர் அபாய கட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 நோயாளிகள் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Corona நோயாளிகளுக்கு எப்படியாவது Oxygen கொண்டு வந்து கொடுங்க.. மத்திய அரசை வெளுத்த Delhi Highcourt

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா., தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதி வேகத்தில் உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா?.. மக்களிடம் கருத்து கேட்பு.. கலெக்டர் சொன்ன ஸ்வீட் தகவல்! ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா?.. மக்களிடம் கருத்து கேட்பு.. கலெக்டர் சொன்ன ஸ்வீட் தகவல்!

    குறிப்பாக தலைநகர் டெல்லியில் தொற்று கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. இது போக அடி மேல் அடியாக டெல்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி விட்டதால், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    25 நோயாளிகள் உயிரிழப்பு

    25 நோயாளிகள் உயிரிழப்பு

    அப்படி கொரோன கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. உடனடியாக உதவுங்கள் என்று டெல்லி அரசு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 நோயாளிகள் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    2 மணி நேரம் மட்டுமே ஆக்சிஜன்

    2 மணி நேரம் மட்டுமே ஆக்சிஜன்

    இது தொடர்பாக மருத்துவமனை இயக்குனர் கூறுகையில், ' ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆக்ஸிஜன் இன்னும் 2 மணி நேரம் நீடிக்கும். வென்டிலேட்டர்கள் மற்றும் பிபாப் திறம்பட செயல்படவில்லை. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், சிகிச்சை பெறும் 60 நோயாளிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    தயவு செய்து உதவுங்கள்

    தயவு செய்து உதவுங்கள்

    எனவே தயவு செய்து உடனடியாக எங்களுக்கு விமானம் மூலம் ஆக்சிஜன் கொண்டு வாருங்கள்'' என்று உருக்கமாக கூறினார். ''இரவு 8 மணியளவில் நள்ளிரவு 1 மணி வரை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் ஐந்து மணி நேரம் பயன்பாட்டில் இருந்தது. அதன்பின்னர் ஆக்சிஜன் தீர்ந்து விட்டது. அவசர ஆக்ஸிஜன் சப்ளை தேவை'' என்று மருத்துவமனையின் அதிகாரி தெரிவித்தார்.

    விமானம் மூலம் வந்த ஆக்சிஜன்

    விமானம் மூலம் வந்த ஆக்சிஜன்

    டெல்லியில் இதுபோல் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. ''நீங்கள் பிச்சை எடுத்தோ அல்லது திருடியோ மக்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உயிர் பிழைக்க உதவுங்கள்'' என்று டெல்லி நீதிமன்றம் கடுமையாக கூறியது. இந்த நிலையில் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க ராணுவ விமான டேங்கர் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பல்வேறு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

    English summary
    A shocking report has emerged that 25 patients have died in the last 24 hours alone due to lack of oxygen at Sir Gangaram Hospital in Delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X