Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்! டேட்டிங் ஆப் சாட்டிங்..! டெல்லிக்கு பறந்த பச்சைக்கிளி! மயக்க மருந்து கொடுத்து சீரழித்த குப்தா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : டேட்டிங் ஆப் மூலம் பழகியவரை பார்க்கச் சென்ற 28 வயது இளம்பெண் ஒருவர் டெல்லியில் போதை பொருள் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இணையங்களின் ஆதிக்கம் நல்லவிதமாக நம்மிடையே அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதனை உபயோகம் செய்யும் நபரை பொறுத்து அது ஆபத்தானதாகவும் மாறுகிறது.

ஏனெனில் இன்றுள்ள காலங்களில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் இருக்கும் இடத்தில் பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டாலும், சில நேரங்களில் விபரீதமான பிரச்சனைகளில் சிக்கும் அபாயமும் இருந்து வருகிறது.

டேட்டிங் ஆப்

டேட்டிங் ஆப்

இன்றுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இடையே வெகுவாக பரவிவரும் கலாச்சாரமாக டேட்டிங் என்பது இருந்து வருகிறது. இதில், சிலர் டேட்டிங் செயலி மூலமாகவும் பெண்களை சந்திக்க ஆர்வமாகவும், அவர்களுடன் பேச ஆர்வமாகவும் இருந்து வருகின்றனர். இவ்வாறான டேட்டிங் செயலியில் அறிமுகம் செய்துகொள்ளும் நபர் ஆண், பெண் எதிரில் பேசும் நபர் குறித்த உண்மையை தெரியாமல் பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகின்றனர்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

அந்த வகையில் தான் இந்த அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. மே 30ஆம் தேதி அன்று தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் 28 வயது பெண்ணை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கண்டுபிடிக்க டெல்லி போலீஸ் குழு ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் வசிக்கும் சந்தேக நபரை டேட்டிங் ஆப் மூலம் அந்த பெண் சந்தித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

ஜூன் 3ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 வயதான பெண் தனது புகாரில் மோஹக் குப்தா என்ற நபரை டேட்டிங் செயலியில் சந்தித்ததாகவும் அவர்கள் நண்பர்களாகியுள்ளனர். இருவரும் தங்கள் தொடர்பு எண்களை பரிமாறிக்கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். மே 30 அன்று, குப்தா டெல்லிக்கு வந்து அந்த பெண்ணை சந்திக்கும்படி கூறினார். அவர்கள் துவாரகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர்.

மயக்க மருந்து

மயக்க மருந்து

அங்கு அவருக்கு ஸ்பைக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பானம் வழங்கப்பட்டது. அதனை குடித்துவிட்டு மயங்கி விழுந்ததாகவும், ஹோட்டல் அறையில் அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் போலீஸாரிடம் கூறியுள்ளார். அடுத்த நாள், அந்த நபர் அவளை ஒரு மெட்ரோ நிலையத்திற்கு வெளியே இறக்கிவிட்டுள்ளார். அதன் பிறகு குப்தா அப்பெண்ணுடைய செல்போன் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதனையடுத்தே அந்தப் பெண் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 328 மற்றும் 376 (கற்பழிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சந்தேக நபர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் எனவும், அவரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+