டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மளிகைக்கடைக்கார் உள்பட 3 பேருடன் தொடர்பில் இருந்த 38 பேருக்கு கொரோனா.. டெல்லியில் 3வது ஹாட்ஸ்பாட்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மூன்றாவது பெரிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் டெல்லியின் தெற்கு முனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 38 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,712 ஆக உயர்ந்துள்ளது, 507 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

38 Patients From Tughlakabad In Third-Biggest COVID-19 Hotspot In Delhi

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட பதிவில் 16,365 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளி விவரம் என்பத மத்திய சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை விட கிட்டத்தட்ட 600 அதிகம் ஆகும்.

இந்நிலையில் நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1893 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை டெல்லியில் கொரோனாவால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆராய்ச்சி செய்கிறோம்.. கொரோனா பற்றி முதல்முறையாக மௌனம் கலைத்த வுஹன் சோதனை மையம்.. என்ன சொன்னது? ஆராய்ச்சி செய்கிறோம்.. கொரோனா பற்றி முதல்முறையாக மௌனம் கலைத்த வுஹன் சோதனை மையம்.. என்ன சொன்னது?

இந்நிலையில் தெற்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத் விரிவாக்க பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் மளிகை கடைக்காரர் உள்பட மூன்று பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் சுகாதாரத்துறையினர் தேடி கண்டுபிடித்தனர். பின்னர், மருத்துவ குழுவினர் அதில் 94 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 35 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. துக்ளகாபாத் விரிவாக்கத்தில் பல வீதிகள் இப்போது சீல் வைக்கப்பட்டுள்ளன.

Recommended Video

    விழுப்புரத்தில் மீன் வியாபாரிக்கு கொரோனா... பீீதியில் மீன் சாப்பிட்டவர்கள்

    டெல்லியின் மிகப்பெரிய ஹாட்ஸ்பாட் நிஜாமுதீன் ஆகும். அங்கு ஒரு மத நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். டெல்லியில் இரண்டாவது பெரிய ஹாட்ஸ்பாட் சாந்தினி மஹால் ஆகும். இப்போது 3வது இடத்தை துக்ளகாபாத் பிடித்துள்ளது.

    English summary
    The third-biggest COVID-19 hotspot in Delhi has been found in the southern end of the national capital, with 38 residents testing positive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X