டெல்லி: எனது கோரிக்கையை ஏற்று மக்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக மிகுந்த உற்சாத்துடனும், கோலாகலத்துடனும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளன.
பொது இடங்களில் மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கின்றன. மூவர்ண அலங்காரங்கள், விளக்குகள் கண்களைப் பறிக்கின்றன. வண்ணமயமான அலங்காரங்களால் ஜொலிக்கிற டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலையில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.
Newest FirstOldest First
8:08 AM, 15 Aug
இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் முக்கியம்- பிரதமர் மோடி
8:08 AM, 15 Aug
பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்- மோடி
8:02 AM, 15 Aug
எனது கோரிக்கையை ஏற்று மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றியதில் மகிழ்ச்சி- பிரதமர் மோடி
7:59 AM, 15 Aug
பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை- பிரதமர்
7:59 AM, 15 Aug
போராட்டத்தில் பங்கெடுத்து வெளியே தெரியாமல் புறக்கணிக்கப்பட்டவர்களை போற்றுவோம்
7:58 AM, 15 Aug
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறது- பிரதமர்
7:58 AM, 15 Aug
பஞ்சம், போர் என அனைத்தையும் தாண்டி இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது- பிரதமர்
7:58 AM, 15 Aug
கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகை சென்றடைய வேண்டும் என்பது காந்தியின் இலக்கு- பிரதமர் மோடி
7:57 AM, 15 Aug
உலக ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியாதான்- பிரதமர் மோடி
7:56 AM, 15 Aug
உலகிற்கு ஜனநாயகத்தை சொல்லி கொடுத்தது இந்தியாதான்- பிரதமர்
7:56 AM, 15 Aug
சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் ஆட்சி ஆட்டம் கண்டது- பிரதமர்
7:45 AM, 15 Aug
ஒவ்வொருவரின் தியாகங்களும் போற்றப்பட வேண்டும்- பிரதமர் மோடி
7:44 AM, 15 Aug
ஒவ்வொருவரின் கனவுகளும் நிறைவேற்றப்பட வேண்டும்- பிரதமர்
7:43 AM, 15 Aug
பெண்களின் சக்தியை சுதந்திர போராட்டத்தில் அவர்கள் வெளிப்படுத்தினர்- பிரதமர்
7:43 AM, 15 Aug
பிரதமர் மோடி தனது உரையில் வேலு நாச்சியார், பாரதியார் குறித்து பேச்சு
7:42 AM, 15 Aug
சுதந்திரத்திற்காக நாம் கொடுத்த தியாகங்கள் மிகப் பெரியது- பிரதமர் மோடி
7:42 AM, 15 Aug
வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது- பிரதமர் மோடி
7:41 AM, 15 Aug
உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது
7:40 AM, 15 Aug
இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நீண்ட நெடியது- பிரதமர் மோடி
7:39 AM, 15 Aug
சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை
7:38 AM, 15 Aug
சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்
7:38 AM, 15 Aug
இந்திய விமான படையின் ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை
7:31 AM, 15 Aug
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
7:31 AM, 15 Aug
Delhi | PM Narendra Modi hoists the National Flag at Red Fort on the 76th Independence Day pic.twitter.com/3tzFBvWuOe
Indian Independence Day 2022 (76 வது சுதந்திர தின விழா 2022 கொண்டாட்டங்கள்) LIVE Updates in Tamil: இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 14 மாலை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆற்றும் உரை மற்றும் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்படும் கொடி, பிரதமர் மோடியின் சிறப்புரை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.