விஸ்தாரா விமானத்தின் காக்பிட் அறையில் விசில் சத்தம்.. நடுவானில் ஏற்பட்ட திடீர் பதற்றம்!
டெல்லி: டெல்லியில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட விஸ்தாரா விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, திடீரென காக்பிட் அறையில் விசில் சத்தம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான விஸ்தாரா உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு என ஏராளமான விமானங்களை இயக்கி வருகிறது.
விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான யுகே 951 என்ற போயிங் 737 விமானம் மும்பை - டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல நேற்று மும்பைக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

காக்பிட் அறையில் விசில் சத்தம்
விமானம் புறப்பட்டு நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானியின் காக்பிட் அறையின் வலது பக்கத்தில் இருந்து விசில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இதைக்கவனித்த விமானி உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உரிய அனுமதி கிடைத்ததும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு
விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக இருந்த தொழில்நுட்ப குழுவினர் விமானத்தை ஆய்வு செய்தனர். முதல் கட்ட ஆய்வுகளில் கோளாறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் தொடர்ந்து வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதா? என்று ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் தவிப்பு
விமானம் பாதிவழி சென்று விட்டு மீண்டும் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தில் மும்பைக்கு செல்ல இருந்த பயணிகளும் உரிய நேரத்தில் மும்பை செல்ல முடியாமல் தாமதம் ஏற்பட்டதால் சங்கடம் அடைந்தனர்.

மாற்று விமானம் மூலம்
இது தொடர்பாக விஸ்தாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''டெல்லியில் இருந்து விமானம் டேக் ஆஃப் செய்த சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கவனித்த விமானி, டெல்லிக்கே மீண்டும் விமானத்தை திருப்ப முடிவு செய்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மாற்று விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது'' என்று தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications