Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி மாநகராட்சியில் ஆம்ஆத்மி அமோக வெற்றி! பாஜக தோல்வி.. பலித்துபோன தேர்தல் கருத்து கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. மாநகராட்சியில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான 126 இடங்களை தாண்டி ஆம்ஆத்மி கட்சி பெற்றுள்ளது. இதன்மூலம் டெல்லி மாநகராட்சி அதிகாரத்தை 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக இழந்துள்ளது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மிக்கு அடுத்ததாக 100 இடங்களை கைப்பற்றி பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தேர்தல் கருத்து கணிப்பு பலித்து போயுள்ளன.

டெல்லியில் 3 மாநகராட்சிகள் இருந்தன. மொத்தம் 272 வார்டுகள் இருந்தன. இந்நிலையில் தான் 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன.

அதன்படி 250 வார்டுகள் கொண்ட ஒரே மாநகராட்சியாக மாற்றப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு டிசம்பர் 4ல் தேர்தல் நடந்தது. மொத்தம் 50 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகின.

ஆம்ஆத்மி முன்னிலை

ஆம்ஆத்மி முன்னிலை

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 42 மையங்களில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றனர். 3 அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டு எண்ணிக்கை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் ஆம்ஆத்மி கட்சி முன்னிலை பெற்றது. 100 இடங்களை கடந்து ஆம்ஆத்மி ஆதிக்கம் செலுத்தியது. 90 இடங்களுடன் முன்னிலையில் பாஜக 2வது இடத்தில் இருந்தது. காங்கிரஸ் மிகவும் மோசமான நிலையில் பின்தங்கியது.

பாஜக முன்னிலை

பாஜக முன்னிலை

இந்நிலையில் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி டெல்லி மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வெற்றது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் பாஜக 126 இடங்களில் முன்னிலையில் இருந்தது. ஆம்ஆத்மி கட்சி 118 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

மீண்டும் ஆம்ஆத்மி

மீண்டும் ஆம்ஆத்மி

இதையடுத்து மீண்டும் ஆம்ஆத்மி கட்சி முன்னிலை பெற்றது. இன்று காலை 10.30 மணி நிலவரப்படி ஆம்ஆத்மி கட்சி 129 வார்டுகளில் முன்னிலை வகித்தது. பாஜக 106, காங்கிரஸ் 10, மற்றவர்கள் 5 இடங்களில் முன்னிலை பெற்றது. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெல்ல வேண்டிய நிலையில் ஆம்ஆத்மி அசத்தலான முன்னிலையை பெற்றுள்ளது.

12 இடங்களில் பாஜக வெற்றி

12 இடங்களில் பாஜக வெற்றி

மேலும் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி சில வார்டுகளில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 12 இடங்களிலும், ஆம்ஆத்மி 8 இடங்களிலும், காங்கிரஸ், மற்றவர்கள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தனர். பிற இடங்களுக்கு இன்னும் வெற்றி, தோல்வி அறிவிக்கப்படவில்லை. அங்கு தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆம்ஆத்மி 86 இடங்களில் வெற்றி

ஆம்ஆத்மி 86 இடங்களில் வெற்றி

மதியம் 12 மணி நிலவரப்படி டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அதிக வெற்றிகளை குவித்து இருந்தது. அந்த கட்சி முன்னிலை வகித்த 131 வார்டுகளில் 86 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தான் முன்னிலை வகித்த 105 வார்டுகளில் 70 இடங்களில் வெற்றியை பதிவு செய்து இருந்தது. காங்கிரஸ் முன்னிலை பெற்ற 10 வார்டுகளில் 4 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 4 வார்டுகளில் பிற கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் ஆம்ஆத்மி அசத்தல்

கருத்து கணிப்பு பலிக்குதே

கருத்து கணிப்பு பலிக்குதே

இதையடுத்து மதியம் 2 மணியளவில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. 250 வார்டுகளில் அதிகாரத்தை கைப்பற்ற 126 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஆம்ஆத்மி கட்சி 132 வார்டுகளில் முன்னிலை வகித்து, அதில் 127 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 105 வார்டுகளில் முன்னிலை வகித்த நிலையில் 100 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி மாநகராட்சி கடந்த 2007 முதல் பாஜகவின் பிடியில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பாஜகவை வீழ்த்தி டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து கணிப்பு பலிக்குதே

கருத்து கணிப்பு பலிக்குதே

முன்னதாக டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஆம்ஆத்மி கட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகின. பாஜக 2வது இடத்தில் இருக்கும் எனகூறப்பட்டு இருந்தது. அதேபால் தற்போதைய தேர்தல் டிரெண்ட் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+