"பெரிய பொய்யர் மோடிதான்; உண்மைக் கண்டறியும் சோதனை அவருக்குதான் தேவை" - ஆம் ஆத்மி சுளீர் அட்டாக்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிதான் மிகப்பெரிய பொய்யர் என்றும், அவரை தான் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பாஜக கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆம் ஆத்மி இவ்வாறு கூறியிருக்கிறது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேயான மோதல் கடுமையாக சூடுபிடித்து வருகிறது.

மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில், இதனை அரசு வாபஸ் பெற்றது. இதனிடையே, இந்த மதுபானக் கொள்கையில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், பல கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ அண்மையில் சோதனை நடத்தியது. இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

'சிசோடியாவுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை'
சிபிஐ விசாரணைக்கு பிறகு வெளியே வந்த மணீஷ் சிசோடியா பாஜக மீது அதிரடியாக குற்றம்சாட்டினார். ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிடுமாறு சிபிஐ அதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக மணீஷ் சிசோடியா தெரிவித்தார். இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பியது. இதற்கு சிபிஐ மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ரா, "சிபிஐ குறித்து அவதூறு கூறிய மணீஷ் சிசோடியாவை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.

"மிகப்பெரிய பொய்யர் மோடி"
இந்நிலையில், கபில் மிஸ்ராவின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ஆம் ஆத்மி எம்எல்ஏவும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சவுரவ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடிதான் மிகப்பெரிய பொய்யர் என நான் நம்புகிறேன். அவர் நிறைய பொய்களை கூறி இருக்கிறார்; கூறியும் வருகிறார். அதிலேயே அருமையான பொய் என்ன தெரியுமா? சிபிஐயும், அமலாக்கத்துறை நடுநிலையான நிறுவனங்கள் என்பதுதான். இந்த பொய்யை உண்மைக் கண்டறியும் சோதனையில் மோடி தெரிவிக்க வேண்டும்.

மோடிக்கு தான் தேவை..
இதை தவிர, கொரோனா தொற்றை வெற்றி பெற்றுவிட்டதாக மோடி கூறியது, கருப்புப் பணத்தை மீட்பேன் எனக் கூறியது, கங்கையை தூய்மைப்படுத்துவதாக கூறியது, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவது கூறியது என அடுக்கடுக்கான பொய்களை அள்ளி வீசியிருக்கிறார் மோடி. அவரைதான் முதலில் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு சவுரவ் பரத்வாஜ் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications