டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு பேரிழப்பு.. டெல்லியை தட்டித்தூக்கும் ஆம்ஆத்மி! மாநகராட்சி தேர்தல் கருத்துக்கணிப்பு ரிலீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: மாநில தேர்தலுக்கு இணையாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக வார்டுகளில் வெற்றிபெறும் என்றும் இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்து உள்ளது.

இந்தியா தலைநகரும் நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றுமான டெல்லியில் இன்று மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இணையானதாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக போட்டியிட்டன.

 குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள் குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள்

கருத்துக்கணிப்பு முடிவுகள்

கருத்துக்கணிப்பு முடிவுகள்

250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் 50.47% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் டைம்ஸ் நவ் மற்றும் ஈடிஜி நடத்திய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

இந்தியா டுடே

இந்தியா டுடே

அதன்படி 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சியில் அதிகபட்சமாக ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 149 முதல் 171 இடங்களை கைப்பற்றும் என்றும் பாஜக 69 முதல் 71 இடங்களில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 இடங்களை மட்டுமே வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதர வேட்பாளர்கள் 5 முதல் 9 இடங்களில் வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டைம்ஸ் நவ்

டைம்ஸ் நவ்

டைம்ஸ் நவ் ஈடிஜி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் 84 முதல் 94 இடங்களில் பாஜக வெற்றிபெறும் எனவும் காங்கிரஸ் கட்சி 6 முதல் 10 இடங்களில் வெற்றிபெறும் என்றும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 146 முதல் 156 வார்டுகளில் வெற்றிபெறும் எனவும் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதர வேட்பாளர்களில் 4 பேர் வரை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருக்கிரது.

பாஜகவுக்கு இழப்பு

பாஜகவுக்கு இழப்பு

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை எடுத்துக்கொண்டால் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 2017 தேர்தலில் 250 இடங்களில் 163 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இம்முறை 100 வார்டுகளில் கூட வெற்றிபெறுவது கடினம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தட்டித்தூக்கும் ஆம் ஆத்மி

தட்டித்தூக்கும் ஆம் ஆத்மி

அதேபோல் காங்கிரஸ் கட்சி கடந்த 2017 மாநகராட்சித் தேர்தலில் 22 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ஒற்றை இலக்க எண்களையே பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இதில் பிரம்மாண்ட வெற்றிபெறும் என தெரிகிறது. கடந்த முறை 51 இடங்களில் வெற்றிபெற்ற அக்கட்சி இம்முற்ஃஇ 150ஐ தாண்டும் என கூறப்படுகிறது.

English summary
A post-election poll conducted by India Today and Times Now TV has revealed that the Aam Aadmi Party will win more wards in the much-anticipated Delhi Municipal Corporation elections parallel to the state elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X