அதிமுக சொத்து மதிப்பு 246 கோடி, திமுக சொத்து மதிப்பு 162 கோடி! வெளியான தகவல்
டெல்லி : இந்தியாவில் உள்ள கட்சிகளின் சொத்து மதிப்பு அடிப்படையில் பாஜக முதலிடத்தையும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாவது இடத்தையும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயக நாடான இந்தியாவில் நூற்றுக்கணக்கான கட்சிகள் உள்ளன குறிப்பாக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும் திமுக அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் ஆட்சியில் மாறி மாறி பதவியில் உள்ளன.
தேர்தல் செலவுகளுக்காகவும் பல்வேறு வகை செலவினங்களுக்கு நன்கொடை உள்ளிட்டவை மூலம் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் நிதி திரட்டி வருகின்றன. அவை முறையாக கணக்கு காட்டப்பட்டு, சேர்த்தும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது.

கட்சிகளின் சொத்து மதிப்பு
இந்த நிலையில் கட்சிகளின் கடன் மற்றும் முன்தொகை வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள நிரந்தர வைப்பு நிதி வரி பிடித்தம் மூலதனம் நன்கொடைகள் மற்றும் இதர சத்துக்கள் உள்ளிட்ட ஆறு வகைகளில் கட்சிகளின் சொத்து மதிப்புகள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் 2019 - 2020 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளில் தேசிய கட்சிகளும் மாநிலத்தில் உள்ள கட்சிகளும் தங்களது சொத்து விவரங்கள் குறித்து வருமான வரித்துறை, மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகளை தொகுத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு கட்சிகளை சொத்து மதிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாஜக முதலிடம்
அந்த அடிப்படையில் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு 4,224 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கணப்பு சமர்ப்பித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே பெரிய மற்றும் பணக்கார கட்சியாக பாஜக முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக 698 கோடி ரூபாய் சொத்துக்கள் உடன் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாவது இடத்திலும், 588 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உடன் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

வைப்பு நிதி கணக்கு
தேசிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 569 கோடி ரூபாய் சொத்துக்கள் உடன் நான்காவது இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 247 கோடி ரூபாய் மதிப்பில் 5வது இடத்திலும் உள்ளது. அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருபத்தி ஒன்பது கோடி ரூபாய் சொத்துக்கள் உடனும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 8 கோடி ரூபாய் சொத்துடன் அடுத்தடுத்த இடங்களில் அங்கம் வகிக்கின்றன. அனைத்துக் கட்சிகளும் அசையாத சொத்துக்களாக வைத்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு வைப்பு நிதியாக மட்டுமே 3653 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக - அதிமுக சொத்து மதிப்பு
அடுத்ததாக மாநில கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி 563 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதல் இடத்திலும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 301 கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக 267 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் வைப்பு நிதியுடன் 3வது இடத்திலும் இருக்கின்றன. சமாஜ்வாதி கட்சி 434 கோடி ரூபாய் வைப்பு நிதியும், அதிமுக 246 கோடியே 90 லட்சமும், திமுக 162 கோடியே 42 லட்சத்தையும் வைப்பு நிதியாக நிதியாண்டுகளில் வைத்திருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications