க்ளவுஸ் அணிந்து பலாத்காரம் செய்தால் குற்றமில்லை என்பதா? உச்சநீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் வாதம்
டெல்லி: நேரடியாக உடலோடு உடல் படவில்லை என்றால் அது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று இந்திய அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன் வைத்தார். மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பு, க்ளவுஸ் அணிந்து பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றமில்லை என்பதை போல இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது நபர் 2016ம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கொய்யாப் பழம் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு போனதும், சிறுமியின் மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தியுள்ளார். பிறகு சிறுமியின் சல்வர் கமீஸ் ஆடையை அகற்ற முயன்றுள்ளார்.
எனவே, சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறி குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. மார்பகங்களை அழுத்தியதால், பாலியல் தாக்குதல் பிரிவின்கீழ் அந்த நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

தோலோடு தோல் படவில்லை
இந்த வழக்கை நீதிபதி புஷ்பா கனேடிவாலா விசாரித்தார். அரசு தரப்பில் போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாகும். ஆனால் நீதிபதி புஷ்பா கனேடிவாலா இந்த சட்டத்தின்கீழ், குற்றவாளி பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஏற்க முடியாது என்று தெரிவித்தார். சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி தொட்டாரா, ஆடைக்குள் கை விட்டு தொட்டாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆடைக்கு மேலே கையை வைத்து மர்ம உறுப்பை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது. சட்டப்படி, இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின்கீழ்தான் வரும். தோல் மீது தோல் உரசி செய்தால்தான் பாலியல் பலாத்காரம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இது பாலியல் தாக்குதல் எனக் கூற முடியாது. இவ்வாறு நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பு வழங்கியிருந்தார்.

போஸ்கோ சட்டம்
போஸ்கோ சட்டத்தின் 8 வது பிரிவின் கீழ் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். அதேநேரம் ஐபிசி 354 இன் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஒரு வருடம் கடுங்காவல் மற்றும் ரூ .500 அபராதம் செலுத்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கையுறை அணிந்து பலாத்காரம்
இந்நிலையில்தான் கடந்த ஜனவரி 27ம் தேதி, மும்பை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வந்தபோது, அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தனது வாதங்களை எடுத்து முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இதுபோன்ற தீர்ப்பு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் . மோசமான முன்னுதாரணமான தீர்ப்பாக இது மாறிவிடும். நாளையே ஒரு நபர் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கையுறையை மாட்டிக்கொண்டு ஒரு பெண்ணின் உடல் முழுக்க தொட்டு தடவி பாலியல் துன்புறுத்தல் செய்தாலும் அவர் இந்த தீர்ப்பின் கீழ் குற்றமற்றவர் என்று அர்த்தமாகி விடும். கையில் கையுறை மாட்டிக்கொண்டு இருந்தேன் எனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் வாதிடக் கூடும் என்று வேணுகோபால் தனது வாதத்தில் தெரிவித்தார்.நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இறுதிகட்ட விசாரணை
இதுதவிர தேசிய பெண்கள் ஆணையம் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தாவே என்பவரை இந்த இந்த விவகாரத்துக்கான நீதிமன்ற சட்ட உதவிகள் ஆலோசகராக நியமித்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் அடுத்தகட்ட மற்றும் இறுதி கட்ட விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

சர்ச்சை தீர்ப்பு
அன்றைய தினம் இந்த வழக்கோடு சேர்த்து மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய மற்றொரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் எடுக்க உள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்பில், "சிறுமி ஒருவர் முன்பாக ஒரு நபர், பேண்ட் ஜிப் திறந்து வைத்திருந்ததாகவும், அந்த சிறுமியின் மீது அந்த ஆண் கையை வைத்திருந்ததாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டு பலாத்காரம் என்ற பிரிவின் கீழ் வராது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த இரு சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் பற்றியும் செப்டம்பர் 14ஆம் தேதி இறுதி கட்ட விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications