டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இரும்பு தடிகளுக்கு பதில் மலர்கள்... டெல்லி போலீசுக்கு விவசாயிகளின் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி : விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க டெல்லி போலீசார் கையில் எடுத்துள்ள இரும்பு தடிகளுக்கு பதிலாக மலர் செடிகளை, காசிபூர் போராட்ட களத்தில் விவசாயிகள் நட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனவரி 26 அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது. இதனைடுத்து, டெல்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடங்களில் சிமெண்ட் தடுப்புகள், இரும்பு தடிகளை டெல்லி போலீசார் அமைத்துள்ளனர்.

 After Spikes On Roads, Farmer Leader Rakesh Tikaits Flower Diplomacy

நாளை நாடு தழுவிய சாலை மறியலை விவசாயிகள் நடத்த உள்ள நிலையில், காசிபூர் போராட்ட களங்களில் விவசாயிகள் மலர் செடிகளை நட்டுள்ளனர். இது பற்றி பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், விவசாயிகளுக்காக இரும்பு தடிகளையும், முள் வேலைகளையும் போலீசார் அமைத்துள்ளனர். ஆனால் நாங்கள் மலர் செடிகளை அவர்களுக்காக நட்டு வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

உ.பி., உத்திரகாண்ட், டெல்லியில் சாலைகளை மறிக்க மாட்டோம் : விவசாயிகள் உறுதிஉ.பி., உத்திரகாண்ட், டெல்லியில் சாலைகளை மறிக்க மாட்டோம் : விவசாயிகள் உறுதி

இது பற்றி விவசாயிகள் சங்க மீடியா பொறுப்பாளர் தர்மேந்திர மாலிக் கூறுகையில், அடையாள நிமித்தமாகவே எல்லையில் இந்த மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. அதே போன்று டில்லி- தர்பர் திகாரா சாலையில் வழி நெடுகிழும் பெரிய அளவில் அழகிய மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இது டெல்லிக்கு அழகு, மனம் தருவருவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை குறைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக டிராக்டர்களில் மண் குவியல்கள் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்கள் அருகே போடப்பட்டுள்ளன. மலர்கள் தனியாக கொண்டு வரப்பட்டு, பிறகு நடப்பட்டன. விவசாயிகளின் இந்த நடவடிக்கைள் குறித்து சமூக வலைதளங்களில், ஹாஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

English summary
Farmer leader Rakesh Tikait sought to change the optics by planting flowers alongside the heavy barricading at Ghazipur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X