உச்சநீதிமன்றம் போட்டபோடு.. நகரம் - தேர்வு மையம் வாரியாக நீட் ரிசல்ட் வெளியீடு.. பார்ப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் பார்த்து கொள்ளலாம்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. மொத்தம் 23 லட்சம் பேர் எழுதினர். இதற்கான ரிசல்ட் என்பது ஜுன் 4ம் தேதி வெளியிடப்பட்டது.

neet supreme court

இதன் தொடர்ச்சியாக தான் தேர்வில் முறைகேடு புகார் எழுந்தது. தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் சர்ச்சை, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடுத்தடுத்து வந்தன. இதனால் நீட் இளநிலை மருத்துவ படிப்புக்கான தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவ-மாணவிகள், எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது இளநிலை நீட் தேர்வு முடிவுகளை ஜூலை 20ம் தேதி மதியத்துக்குள் வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது நீட் ரிசல்ட் என்பது மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும். அதில் மாணவர்களின் விவரங்கள் இடம் பெறக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை நகரம், தேர்வு மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ரிசல்ட்டை மாணவ-மாணவிகள் exams.nta.ac.in எனும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் நாளை மறுநாள் மீண்டுமு் அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+