முன்னுரையால் சர்ச்சை.. ‛அம்பேத்கரும் மோடியும்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காத இளையராஜா! விபரம்
டெல்லி: இசையமைப்பாளரான இளையராஜா அணிந்துரை எழுதி சர்ச்சையான‛அம்பேத்கரும்-மோடியும்' என்ற நூல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. இதில் இளையராஜா பங்கேற்காத நிலையில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் சார்பில் ‛ அம்பேத்கரும் மோடியும்' என்ற தலைப்பில் சீர்த்திருத்தவாதிகள் சிந்தனையும், செயல்வீரர்களின் நடவடிக்கையும் என்ற பெயரில் புத்தகம் எழுதியது.
இந்த புத்தகத்துக்கு இசையமைப்பாளரான இசைஞானி இளைராஜா முன்னுரை எழுதி இருந்தார். இதுதொடர்பான விபரங்கள் வெளியாகி பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

முன்னுரை எழுதிய இளையராஜா
அதாவது அந்த புத்தகத்தில் இளையராஜா, ‛‛பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாக கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு செய்துள்ளது'' என குறிப்பிட்டு இருந்தார். மேலும் முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்டவை மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பிரதமர் மோடி அம்பேத்கர் ஒப்பீடு
அம்பேத்கர் இருந்தால் இதனை நினைத்து பெருமைப்பட்டிருப்பார் என குறிப்பிட்டு இருந்தார். அதோடு மட்டுமின்றி அம்பேத்கரும், பிரதமர் மோடியும் ஏழ்மை, ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள். இவருவருமே அதனை ஒழிக்க பாடுபட்டனர் என பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இருந்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இதனை எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர். அரசியல் பதவிக்காக இளையராஜா இவ்வாறு ஒப்பீடு செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். மேலும் இளையராஜா தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என கூறினர். ஆனால் இளையராஜா தனது கருத்தை ஒருபோதும் வாபஸ் பெறமாட்டேன் என உறுதியாக கூறினார்.

பங்கேற்காத இளையராஜா
இது நடந்த அடுத்த சில வாரங்களில் இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் ‛அம்பேத்கரும் மோடியும்' என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லி நேரு அருங்காட்சியகத்தில் மத்திய ஒலிபரப்புத்துறை சார்பில் இன்று நடந்தது. விழாவை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கு ‛அம்பேத்கரும் மோடியும்' எனும் நூலை பெற்று கொண்டார்.

குஷ்பு பங்கேற்பு
இந்த விழாவில் இசையமைப்பாளரும், எம்பியுமான இளையராஜா பங்கேற்கவில்லை. விழாவில் மத்திய அமைச்சர் அனுராக், மத்திய இணையமைச்சர் எல் முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications