பாஜக கையில் ‘ரிமோட்’! பச்சக்கென ஒட்டிக் கொண்ட ஓபிஎஸ் & கோ! எடப்பாடி டீம் ஆப்செண்டாமே! பரபர டெல்லி!
டெல்லி : ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி மட்டும் பங்கேற்று இருக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர் விவகாரம் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இந்த கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையும் சட்டப்பேரவை மக்களவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வாக்காளர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிப்பதற்கு வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

ரிமோட் வாக்குப் பதிவு
தற்போதைய சூழ்நிலையில் செயல் விளக்கம் அளிப்பது மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தியாவில் இருக்கும் எட்டு தேசிய கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 57 மாநில கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 8 தேசிய கட்சிகளின் 16 பிரதிநிதிகளும் 40 மாநில கட்சிகளைச் சேர்ந்த 67 பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம்
பாஜக தவிர பெரும்பாலான தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் ரிமோட் வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி தரப்பு இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த தம்பிதுரை உள்ளிட்ட சிலர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியான நிலையில் கூட்டம் முடிந்த பிறகும் யாருமே அந்த பக்கமே வரவில்லை. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவர் அணியின் தேர்தல் பிரிவு செயலாளர் முன்னாள் எம்எல்ஏவும் ஆன சுப்புரத்தினம், வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி ஆப்செண்ட்
இந்த நிலையில் கூட்டத்தை புறக்கணிக்க என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்று யாருமே இல்லை என அந்த தவாலை பெற அதிமுக நிர்வாகிகள் மறுத்ததோடு அதனை திருப்பி அனுப்பியும் வைத்தனர்.

என்ன காரணம்?
இதை அடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் நேரடியாக கடிதம் அனுப்பியும் அதையும் எடப்பாடி தரப்பு பெற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அளித்தார்.அப்போதும் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளாததால் அதிமுகவிலிருந்து யாருமே பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டது. பின்னர் எடப்பாடி தரப்பிலிருந்து இருவர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் ஓபிஎஸ் தரப்பில் இருந்து இரு நிர்வாகிகள் பங்கேற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் அதிமுக என்ற பெயரிலேயே அமர வைக்கப்பட்டு இருந்தனர். தேர்தல் ஆணைய அழைப்பை எடப்பாடி தரப்பு புறக்கணித்து இருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications