இந்திய விமானப் படையின் புதிய தலைமை தளபதி அறிவிப்பு
டெல்லி: தற்போது தலைமை தளபதியாக உள்ள பதௌரியா விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தியா விமானப் படையின் புதிய தலைமை தளபதியாக விவேக் ராம் சவுத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா விமானப் படையில் தற்போது தலைமை தளபதியாக உள்ளவர் ராகேஷ் குமார் சிங் பதௌரியா. இவர் கடந்த 2019 செப்டம்பர் 30 முதல் விமானப் படையில் தலைமை தளபதியாக இருந்து வருகிறார்.

இவரது பதவிக் காலம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்தியா விமானப் படையின் புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி தற்போது இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ளார். ஏர் மார்ஷல் சவுத்ரி கடந்த 1982 முதல் விமானப் படையில் சேவை புரிந்து வருகிறார். தற்போது வரை பணிக் காலத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள அவர், பரம் விசிஷ்ட சேவா, அதி விசிஷ்ட சேவா மற்றும் வாயு சேனா ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
ஏர் மார்ஷல் சவுத்ரி சுமார் 3,800 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர் மிக் -29 ரக போர் விமானங்களை இயக்குவதில் வல்லுநராக உள்ள அவர், மேற்கு விமானப்படைத் தளபதியாகவும் இருந்தவர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications