நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்.. இந்தி பிரச்சனைக்கு மத்தியில் மோடி பேச்சு
டெல்லி: ‛‛நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, நீதித்துறையுடன் சாமானியர்களை தொடர்பு கொள்ள வைக்கும்'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லியில் நேற்று அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 39வது தைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமை வகித்து பேசினார்.
இதையடுத்து இன்று விக்யான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்வர்களின் கூட்டு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உள்ளூர் மொழியை ஊக்குவிக்கணும்
பொதுமக்கள் எளிமையான முறையில் சட்டத்தை புரிந்து கொள்ள வசதியாக நாடாளுமன்றம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டால் அவர்கள் நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது. இதுபற்றி அரசு ஆய்வு செய்து வருகிறது. மேலும் உள்ளூர் மொழிகளை நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி குறிப்பிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.இதற்கு நீண்டகாலம் எடுத்தாலும் கூட இது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் அவர்கள் நீதித்துறையுடன் தங்களை தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.

எளிய முறையில் நீதி
மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியை நம்மால் நமது தாய்மொழியில் வழங்க முடியாதா?. சில மாநிலங்கள் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தி உள்ளனர். இந்த முறையை பின்பற்றலாம். மேலும் டிஜிட்டல் முறையையும் பின்பற்ற வேண்டும். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டுகள் நிறைவடைய போகிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உரிய நேரத்தில் எளிய முறையில் நீதி கிடைக்க வேண்டும்

புதிய அமைப்புகள்
இதற்காக நீதித்துறையில் புதிய அமைப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2015ம் ஆண்டில் 1800 சட்டங்கள் தேவையின்றி இருப்பதாக கண்டறிந்தோம். இதில் மத்திய அரசு 1,450 சட்டங்களை நீக்கியுள்ளது. மாநில அரசு வெறும் 75 சட்டங்களை மட்டும் ரத்து செய்துள்ளன. இதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
Recommended Video

என்வி ரமணா பேச்சு
இந்த மாநாட்டில் இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணாவும் உரையாற்றினார். அவர் கூறுகையில், "நமது கடமையை நிறைவேற்றும் போது, லக்ஷ்மண் ரேகா கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுநல வழக்குகள் என்பது ஒருகாலத்தில் பொதுநலன் சார்ந்து இருந்தது. தற்போது இது தனிப்பட்ட நலன் வழக்குகளாக மாறியுள்ளன. இது தனிப்பட்ட நபர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன'' என கவலை தெரிவித்தார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications