பழைய பொருட்கள் மூலம் புது காரை தயாரித்தவருக்கு.. ஆனந்த் மகேந்திரா கொடுத்த செம சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் தத்தாத்ராய லோகர். இவரது மகளுக்கு கார் என்றால் கொள்ளை பிரியம். நாம் ஒரு கார் வாங்க வேண்டும் என்று தனது தந்தையிடம் அடிக்கடி கூறி வந்தார். ஆனால் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த தத்தாத்ராய லோகர் கார் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.
ஆனாலும் மகளின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பல லட்சக்கணக்கில் கார் வாங்க முடியாது என்பதால் தானே குறைந்த விலையில் ஒரு காரை வடிவமைக்க முடிவு செய்தார்.

ரூ.60,000 செலவில் புதிய கார்
தொடர்ந்து தனது எண்ணத்தை செயலாக்கமாக்கினார். .தனது வீட்டில் இருந்த பழைய உலோக பொருள்கள் மற்றும் துணி , கண்ணாடி போன்ற கையில் கிடைத்த பொருள்களை கொண்டே அசத்தலாக ஒரு காரை தயாரித்தார் தத்தாத்ராய லோகர். வெறும் ரூ.60,000 செலவில் தந்தை புதிய காரை வடிவமைத்தது கண்டு அவரது மகள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.

பட்டிதொட்டியெங்கும் வைரல்
பழைய பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்ட தத்தாத்ராய லோகரின் கார் நாட்கள் செல்ல, செல்ல பட்டிதொட்டியெங்கும் வைரலானது. பல்வேறு செய்தி நிறுவனமும் இது குறித்த செய்திகளை வெளியிட்டன. தத்தாத்ராய லோகருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த தகவல் மகேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவின் காதுகளையும் எட்டியது.

பாராட்டிய ஆனந்த் மகேந்திரா
தத்தாத்ராய லோகரின் காரை பார்த்து ஆனந்த் மகேந்திரா அசந்து போய் விட்டார். தொடர்ந்து தத்தாத்ராய லோகரை வெகுவாக பாராட்டிய அவர், '' இந்த கார் தெளிவான விதிமுறைகளின்றி உருவாக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் நமது மக்களின் புத்தி கூர்மை மற்றும் சிறந்த செயல் திறன்களைப் பாராட்டுவதை ஒருபோதும் நான் நிறுத்த மாட்டேன்'' என்று புகழாரம் சூட்டியுள்ளார். வெறுமனே பாராட்டுவதோடு நிறுத்தி விடாமல் அடுத்து ஆனந்த் மகேந்திரா செய்த செயல்தான் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய கார் பரிசு
அதாவது இருப்பதை வைத்து மிக தரமான காரை உருவாக்கிய தத்தாத்ராய லோகருக்கு புதிய கார் ஒன்று பரிசளிக்கப்படும் என்று ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், '' தத்தாத்ராய லோகர் உருவாக்கிய கார் விதிமுறைகளை மீறப்பட்டுள்ளதால் விரைவிலோ அல்லது பிறகோ அவரது கார் இயங்குவதற்கு அதிகாரிகள் தடை விதிக்கலாம். நான் தனிப்பட்ட முறையில் அவருக்குப் ஒரு பொலேரோ காரை வழங்குவேன். அதாவது குறைந்த வளத்தை வைத்து, அதிகம் செய்யலாம் என்று உணர்த்துவதால் அவரது உருவாக்கம் நம்மை ஊக்குவிக்கும் வகையில் மஹிந்திரா ரிசர்ச் வேலியில் காட்டப்படலாம்' என்று ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications