டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் சிகிச்சைக்காக அருண் ஜேட்லி அனுமதி.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்!

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் டிவிட் செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உடல்நல குறைவு... அமெரிக்க மருத்துவமனையில் ஜேட்லி அனுமதி- வீடியோ

    டெல்லி: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விரைவில் குணமடைய வேண்டும் என்று ராகுல் காந்தி மற்றும் பல அரசியல் தலைவர்கள் டிவிட் செய்துள்ளனர்.

    பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். உடலில் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார். அடுத்த வாரம் அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த வருடம் அருண் ஜேட்லிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்தே அவருக்கு உடலில் அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சரி செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கிறார்.

    ராகுல் காந்தி டிவிட்

    அவரின் உடல்நிலை குறித்து தற்போது பல்வேறு தலைவர்கள் விசாரித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். அருண் ஜேட்லியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது . அவருடைய கொள்கைகள் காரணமாகவே அவருடன் நாங்கள் எப்போதும் சண்டை போடுகிறோம். ஆனால் அவரின் உடல்நல முன்னேற்றத்திற்காக நாங்கள் எங்கள் அன்புகளை அனுப்புகிறோம். உங்கள் குடும்பத்துடனும், உங்களுடனும் நாங்கள் 100% சதவிகிதம் இருப்போம், என்று கூறியுள்ளார்.

    லாலு பிரசாத் யாதவ்

    அருண் ஜேட்லி உடல்நிலை வேகமாக சரியாக பிரார்த்தனை செய்வதாக மூத்த அரசியல் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் டிவிட் செய்துள்ளார்.

    ஒமர் அப்துல்லா டிவிட்

    காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் கட்சியை சேர்ந்தவருமான ஒமர் அப்துல்லா இதுகுறித்து செய்துள்ள டிவிட்டில் ''நான், எனது கட்சி சார்பாகவும், எனது தந்தை சார்பாகவும் அருண் ஜேட்லி உடல்நிலை சரியாக வேண்டுகிறேன். அவர் விரைவில் முழு உடல்நலத்துடன் இந்தியா திரும்பி பணிகளை தொடர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    சல்மான் குர்ஷித் டிவிட்

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித் இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில் ''அருண் ஜேட்லியின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டேன். பல வேறுபாடுகள் இருந்தாலும், பாஜகவில் இவர் முக்கியமான தலைவர். இவரது உடல்நலம் வேகமாக குணமடைய வேண்டுகிறோம்.'' என்று டிவிட் செய்துள்ளார்.

    English summary
    Minister Arun Jaitley admits in US hospital : Rahul Gandhi hopes for speedy recovery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X